Back to Top

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து நல்லூரில் பேரணி

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து நல்லூரில் பேரணி

June 16, 2017  03:30 pm

Bookmark and Share
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தினை எதிர்த்து இன்று யாழ்ப்பாண நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி போராட்டம் ஒன்று முன்னேடுக்கப்பட்டது.

முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத தீர்மானத்தினை கைவிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு இடம்பெற்றது.

இது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கபட்டு அங்கிருந்து யாழ் கோவில் உள்ள வடமாகாண முதலமைச்சர் வாசஸ்தலம் வரை சென்று நிறைவடைந்தது..

இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் எமது கடமைதான் எமக்கு முக்கியம் அதனை தான் நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள் அதற்காக எமது இந்த பயணம் தொடரும் என்று தெரிவித்தார்.

பல்வேறு பதாதைகளும் முன்னாள் அரசியல் தலைவர்கள், மற்றும் சிவில் சமூக, இளைஞ்சர்கள், ஊடகவியாளர்கள், சமூக ஆய்வாளர்கள் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.

(அத தெரண நிருபர்)