Back to Top

நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைவருக்குமே சவாலாக மாறிவருகின்றன

நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைவருக்குமே சவாலாக மாறிவருகின்றன

June 16, 2017  06:06 pm

Bookmark and Share
நாட்டிலே நடைபெறுகின்ற சம்பவங்கள் இங்கு வாழுகின்ற அனைவருக்குமே ஒரு சவாலான விடயமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

அவற்றிலிருந்து எங்களை நாங்கள் மீட்டெடுத்து இந்த நாட்டின் சமாதானத்துக்கும் ஐக்கியத்துக்கும் எந்தக் கேடும் விளையாத வகையில் எங்களுடைய எதிர்கால சந்ததிக்குக் எந்தக் கேடும் விளையாத வளமான நாட்டைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சமாதானத்தினையும், இன ஐக்கியத்தையும் சமத்துவத்தினையும் உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு வகையாக நான்கு இனங்களும் மதங்களும் இணைந்து வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற ஐக்கியம் சமாதானம் என்பவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் தான் இந்த நிகழ்வை மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

மதங்கள் என்பது மனிதனை வழிப்படுத்தவதற்கும், மனிதன் சமூக விதிகளுக்குட்பட்டு நடந்து கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைகின்ற ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுகின்றது.

இந்த வகையிலே எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தினுடைய போதனைகளையும் உபதேசங்களையும் பார்க்கின்ற போது முழுமையாக சமூக நீதியைப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

(அத தெரண நிருபர்)