
திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
June 17, 2017 10:54 am
திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை நகர் பிரதேசத்தில் 2கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் 37 மற்றும் 42 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் மொத்தமாக கொள்முதல்செய்த கேரளா கஞ்சாவை திருகோணமலை நகரில் சில்லறையாக விற்கும் நோக்கத்துடன் கொண்டுசெல்லும் வழியில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நோக்கத்துடன் தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளார்கள்.
(அத தெரண நிரூபர்)