Back to Top

மாங்குளம் நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

மாங்குளம் நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

June 17, 2017  03:41 pm

Bookmark and Share
மாங்குளத்தில் அமைய உள்ள புதிய நீதிமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (17) காலை இடம்பெற்றது.

நீதி மற்றும் பௌத்தசாசன பிரதி அமைச்சர் எச்.ஆர். சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலிலும் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்றப் பணியாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(அத தெரண நிருபர்)