Back to Top

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன

June 18, 2017  01:18 pm

Bookmark and Share
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந் திகதி கொண்டாடப்படவுள்ளது.

சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் தீபாவளி அன்று சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

தற்போது ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.

அக்டோபர் 16-ந் திகதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிகாலையிலேயே பயணிகள் குவிந்து இருந்தனர்.

8 மணிக்கு கவுண்டர்கள் திறந்ததும் பயணிகள் முன் பதிவு செய்து டிக்கெட்டுகள் பெற்றுக் கொண்டனர்.

நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை ரயில்களில் டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

டிக்கெட்டுகள் கிடைத்த பயணிகள் தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

“தீபாவளி கொண்டாடும் தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்“ என்றனர்.

தீபாவளி டிக்கெட்டுகளை ஆன்லைன் கம்ப்யூட்டர் மூலம் பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனால் ரெயில் கவுண்டர்களில் காத்திருந்த பலருக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

அக்டோபர் 17-ந் திகதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 18-ந் திகதி பயணம் செய்பவர்கள் 20-ந் திகதியும் முன்பதிவு செய்யலாம்.

Most Viewed