Back to Top

ராஜாங்க அமைச்சருக்கும் எனக்கும் போட்டி கிடையாது

ராஜாங்க அமைச்சருக்கும் எனக்கும் போட்டி கிடையாது

June 18, 2017  03:51 pm

Bookmark and Share
இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென் மேரிஸ் மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டிகளும் கிடையாது. மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் நாங்கள் இருவரும் இணைந்தே சேவைகளை வழங்கி வருவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்த்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி 98 வது அகவையில் கால்பதிப்பதை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்டிருந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் உட்பட ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன்,கோட்டகல்வி பணிப்பாளர் எஸ்.துரைராஜ்,உதவி கல்வி பணிப்பாளர் டி.பி.தனபாலன் பலரும் கலந்து கொன்டனர்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சிலர் குறை கூறிவருகின்றனர்.

எனக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் அவர்களுக்கும் போட்டிகள் இருக்கின்றமையாலேயே, மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அமைச்சிக்கு நிதி வழங்கபடுவதில்லையென கூறைகுறி வருகிறார்கள் வெளியில் பார்பவர்கள் எதுவேண்டுமானாலும் கூறலாம்.

அண்மையில் வழங்கபட்ட 3000 உதவி அசிரியர்கள் நியமனத்தில் பத்தாயிரம் ருபா வேதனத்தை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்களுக்கு பத்தாயிரம் ருபா சம்பளத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஆனால் அதற்கான நிதி இதுவரையிலும் மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாணஅமைச்சுக்கு வந்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

(அத தெரண நிருபர்)

Most Viewed