Back to Top

புதிதாக தோன்றும் அ.தி.மு.க கட்சி

புதிதாக தோன்றும் அ.தி.மு.க கட்சி

June 18, 2017  05:59 pm

Bookmark and Share
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய கட்சியொன்றை தோற்றுவிக்கும் முயற்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அங்கம் வகித்த அனைத்திந்திய அண்ணாத் திராவிட முன்னேற்ற கழகம் பிரதான கட்சியாக செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய முதல்வர் ஒருவரை நியமிக்கும் ஒரு செயற்பாடாகவும், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் ஆதரவை திரட்டும் நோக்கிலும் இந்த கட்சி தோற்றுவிக்கப்படவுள்ளதாக தமிழக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் டெல்லி அரசாங்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலும் இந்த புதிய முதல்வர் தெரிவு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் அரசியல் சாராத சட்டத்துறையைச் சார்ந்த வழங்கறிஞர் எனவும், டெல்லி அரசியலுக்கு மிகவும் நெருக்கமானவர் என இந்திய அரசியல் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த விடயத்தில் ஒரு பங்காளாராக செயற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் அங்கத்தவராக குறித்த சட்டத்துறை சார்ந்தவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே. சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார்.

அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[

இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (சுருக்கமாக அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சியாக விளங்குகிறது.

தேர்தலை சந்தித்தும், தற்காலிகமாகவும் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), இரா. நெடுஞ்செழியன், ஜானகி இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்.

தற்போது எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக உள்ளார்.

இந்த நிலையில், புதிய முதலமைச்சர் ஒருவரை பதவியிலமர்ந்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக டெல்லி அரசியல் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.