Back to Top

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது

June 18, 2017  06:20 pm

Bookmark and Share
ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமை பண்புகள் அதன் திறமைகள் சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே அது முழுமையடைகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார் .

நேற்று கிளிநொச்சி திருநகா் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் லண்டன் லிட்டில் எய்ட் மற்றும் திங் டு வைஸ் நிறுவனத்தின் அமைப்பினரால் நடத்தப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்தி கல்விச் செயலமர்வும் அதன் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டா்

கல்வி வளர்ச்சியில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளமை துரதிஸ்டவசமானது.

​ பின்னோக்கிச் செல்லும் கல்வியை மேம்படுத்த வேண்டும் இந்த மாவட்டத்தின் கல்வி நிலை கீழ்மட்டத்தை நோக்கி செல்வதை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் கல்வி சார்ந்த எல்லோருக்கும் உள்ளது.

ஆனால், அதனை எப்படி மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது தொடர்பாக எங்களுக்குள் நிறைய வேற்றுமைகள் காணப்படுகின்றன.

அந்த வேற்றுமைகள்தான் தொடர்ந்தும் இந்த மாவட்டத்தின் கல்வியை மேம்படுத்த முடியாததற்கான பிரதான காரணமாக தடையாக காணப்படுகின்றது என நான் கருதுகின்றேன்.

(அத தெரண நிருபர்)