Back to Top

அடுத்த கட்ட புத்தாக்கத்துக்கு தயாராகும் Sirocco Air Technologies

அடுத்த கட்ட புத்தாக்கத்துக்கு தயாராகும் Sirocco Air Technologies

June 19, 2017  12:16 pm

Bookmark and Share
காற்றோட்ட தீர்வுகள் வழங்குவதில் இலங்கையில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகத் திகழும் Sirocco Air Technologies, ஸ்பெய்ன், இத்தாலி, ஜேர்மனி மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளைச் சேர்ந்த தனது பிரதான பங்காளர்களுடன் கைகோர்;த்து அடுத்த கட்ட புத்தாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து உயர் தரம் வாய்ந்த விசேடத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

காற்றோட்டம், வளி தூய்மையாக்கல், குளிர வைத்தல் மற்றும் வாயு போக்குவரத்து போன்ற செயற்பாடுகளை செம்மையாக முன்னெடுக்கும் Sirocco இனால், முழுமையான வசிப்பிட, வணிக மற்றும் தொழிற்துறை சார்ந்த தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு உயர் மட்ட நிபுணத்துவம் பின்புலமாக அமைந்துள்ளது.

இவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள் மற்றும் உயரக்கட்டடங்கள் போன்றவற்றில் சிக்கனமான வகையிலும், சூழலுக்கு பாதுகாப்பான வகையிலும் காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

பரிபூரண களஞ்சியசாலை மற்றும் தொழிற்துறை சார்ந்த தீர்வுகளை வழங்கும் ளுசைழஉஉழ நவீன வலுச்சிக்கனமான கற்றோட்ட கட்டமைப்புகளை வடிவமைப்பது, விநியோகிப்பது, தூய்மைப்படுத்துவது மற்றும் பொருத்துவது போன்ற செயற்பாடுகளுக்கான பொறுப்பையும் ஏற்றுள்ளது.

வாயு தூய்மையாக்கல், எண்ணெய் தூய்மையாக்கல், புகை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தல், வெப்பம் பிரித்தகற்றல் மற்றும் பசுமையான வாயு, மாசு மற்றும் தூசு பிரித்தகற்றல், கல்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு (GI) மற்றும் ஃபப்ரிக் டக்ட்டிங் மற்றும் ஆவியாக்கல் மூலம் குளிரவைத்தல் போன்றனவும் வழங்கப்படுகின்றன.

மேலும், Sirocco இனால் முன்புனைந்த கட்டடங்கள், உள்நாட்டில் புனையப்பட்ட உருக்கு இரும்பு கட்டமைப்பிலான மெசனைன் நிலங்கள், களஞ்சியப்படுத்தல் படி கட்டமைப்புகள், டொக் சீராக்கிகள், பொருட்கள் உயர்த்திகள், மூலப்பொருட்கள் கையாளல் சாதனம், பாரமுயர்த்தல் மேசைகள், இலத்திரனியல், நிலைத்த மற்றும் சுமந்து செல்லிகள் போன்றன வழங்கப்படுகின்றன.

சூழலை பாதுகாப்பதற்கு காண்பிக்கும் அர்ப்பணிப்பு என்பது Sirocco மாபெரும் வலிமையாக திகழ்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயு வெளியேற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒழுக்கமான வியாபார செயற்பாடுகளை உருவாக்கி பேணுவதனூடாக நிலை பேறாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது.

Sirocco குரூப் ஒஃவ் கம்பனிஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேன் சந்திரரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ´Sirocco வின் புத்தாக்கங்கள் மூலமாக, எமது வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை பெற்றுக்கொடுக்க முடியும்.

மேலும், எமது மெசனைன் களஞ்சியப்படுத்தல் மாற்றங்கள் மூலமாக, அதிகரித்துச் செல்லும் இடவசதிக்கான வாய்ப்பை அதிகளவு வழங்கப்படுகிறது.

எமது சுமந்து செல்லும் கட்டமைப்புகளின் ஊடாக, உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கனவே காணப்படும் செயற்திட்டங்களை பதப்படுத்திக் கொள்ளவும் நாம் உதவிகளை வழங்குவோம்.

அதனூடான முதலீட்டின் மீது சிறந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். சர்வதேச ரீதியில் காணப்படும் எமது நிபுணத்துவம் வாய்ந்த பங்காளர்கள் மூலமாக இவை அனைத்துக்கும் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

முதல் தடவையில் நாம் பணியை சரியாக முன்னெடுப்போம் என்பதை உறுதி செய்து, எமது வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை வழங்குவதாக அமைதுள்ளது.´ என்று தெரிவித்தார்.

வெவ்வேறு துறைகளில் வழங்கும் பெருமளவான தீர்வுகளுக்காக Sirocco புகழ்பெற்றுள்ளது. நிர்மாணம், ஆடைத் தொழிற் துறை, உணவு, இறப்பர், நூல் மற்றும் கயிறு, தேயிலை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வானுயர்ந்த கட்டடங்கள், களஞ்சியசாலைகள், பொறியியல் நிறுவனங்கள், கட்டடக்கலைஞர்கள், சரக்கு கையாளும் நிறுவனங்கள் போன்ற துறைகளுடன் நிறுவனம் தற்போது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், விளையாட்டு வசதிகளுக்கும் பங்களிப்பை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தீர்வுகளை நிறுவனம் வழங்கிய வண்ணமுள்ளது. உயர் தரம் வாய்ந்த பொருட்கள் முதல் உரிய காலத்தில் ஆலோசனை சேவைகள் போன்றன துறையில் பரந்தளவு அனுபவத்துடன் வழங்கப்படுகிறது.

ஆர்பிகோ, ஹேலீஸ், சொஃப்ட்லொஜிக், சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், கொகா கோலா, நெஸ்லே, சிலோன் பிஸ்கட்ஸ், ஹைட்ராமணி குரூப், சிஐசி அக்ரி பிஸ்னஸ், அன்செல், சில்வர்மில், எம்பையர் டீஸ், பிரான்டிக்ஸ், மாஸ், டைன்மோர், ஏ.எம.;டபிள்யு, க்ளெக்சோஸ்மித்க்ளைன், ரொசெல், லோட்ஸ்டார், அபான்ஸ், அக்சஸ் என்ஜினியரிங், நவலோக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நிபொலக், ஹேமாஸ், ப்ரீமா, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் பல நிறுவனங்களுக்கு செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

சந்திர ரத்ன மேலும் தெரிவிக்கையில், ´Sirocco வில் காணப்படும் அதிகளவு தகைமை வாய்ந்த பொறியியலாளர்கள் எமது வலிமையாக அமைந்துள்ளனர்.

இவர்களால் சவால்கள் நிறைந்த காலக்கெடுவினுள் மிகவும் சிக்கல் நிறைந்த தீர்வுகளை பெற்றுக ;கொடுக்கக் கூடியதாகவுள்ளது.

எமது சர்வதேச வர்த்தக நாமங்களுடன் இது இணைந்துள்ளதுடன், தரக் கட்டுப்பாடு மற்றும் நியமங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி மேற்கொள்ளப்படுகின்றன.

Sirocco க்கு அதன் பிரிவுகளில் நிபுணத்துவத்தை கொண்டிருக்க உதவியாக அமைந்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் எமது தலைமைத்துவத்தை சந்தேகங்களின்றி முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக அமைந்துள்ளது´ என்றார்.

படம்: Sirocco வின் சில செயற்திட்டங்கள்.