Back to Top

ரவிராஜ் வழக்கு: செப்டம்பர் விசாரணை

ரவிராஜ் வழக்கு: செப்டம்பர் விசாரணை

June 19, 2017  03:18 pm

Bookmark and Share
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை விசாரிக்க தினம் நியமிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தின் ஜூரி சபை முன்னிலையில், வழக்கு விசாரிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் செப்டம்பர் 4ம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, இன்று தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களான கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(அத தெரண தமிழ்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed