Back to Top

விசாரணைகளில் இடையூறு வேண்டாம் - விக்னேஸ்வரன் சம்பந்தனிடம் கோரல்

விசாரணைகளில் இடையூறு வேண்டாம் - விக்னேஸ்வரன் சம்பந்தனிடம் கோரல்

June 19, 2017  04:39 pm

Bookmark and Share
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் முக்கிய கோரிக்கைகளை விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமைச்சர்கள் இருவருக்கும் விடுவிக்கப்பட்ட ஒரு மாத கட்டாய விடுமுறையை ரத்து செய்வதாகவும், ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் போது சுதந்திரமாக பதிலளிப்பதற்கு எந்தவொரு இடையூறுகளையும் ஏற்படுத்த கூடாது என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன் திணைக்கள அதிகாரிகளுக்கும், சாட்சிகளுக்கும் அவர்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கு அழுத்தங்களை ஏற்படுத்தாது உரிய வாய்ப்பினை வழங்குமாறு முதலமைச்சர் கோரியுள்ளார்.

யாழ்ப்பாண ஆயர், நல்லை ஆதீனம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் அண்மையில் முதல்வரை சந்தித்து விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த விடுமுறை ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பிலான சாட்சியாளர்கள் குறித்த அமைச்சர்களின் கீழ் உள்ள திணைக்களங்களில் பணியாற்றுகின்மை காரணமாக அவர்களுக்கு எந்தவொரு அழுத்தங்களும் விடுக்கப்படக் கூடாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

(அத தெரண தமிழ்)