Back to Top

நியாயமான காரணமின்றி மூடிக் கிடக்கும் உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனம்

நியாயமான காரணமின்றி மூடிக் கிடக்கும் உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனம்

June 19, 2017  05:16 pm

Bookmark and Share
எந்தவொரு நியாயமான காரணங்களும் இன்றி தெஹிவளை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தை ஒன்றரை மாதங்களுக்கும் அதிக காலம் மூடியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மேற்கொண்ட போராட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து நிர்வாகிகள் மறு அறிவித்தல் வரை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்தக் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மஹபொல புலமை பரிசில் நிதியை 5000 ரூபாவாக அதிகரித்து போன்று, தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவையும் அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருந்தி அண்மையில் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண தமிழ்)