Back to Top

BMICH மதிப்புமிக்க பசுமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

BMICH மதிப்புமிக்க பசுமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

June 19, 2017  05:32 pm

Bookmark and Share
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த மையத்தின் (BMICH ) நீண்டகால சுற்றாடல் அர்ப்பணிப்பு அண்மையில், இலங்கை காலநிலை நிதியத்தால் மதிப்பு மிக்க ´ISO 14064-1:2006´ சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

´ISO 14064-1:2006´ பசுமைச் சான்றிதழானது நிறுவன மட்டத்தில் பச்சைவீட்டு வாயு வெளியீடு மற்றும் அகற்றல் என்பவற்றுக்கான அறிக்கையிடுதல், அளவீட்டுக்கான அடிப்படை கொள்கை மற்றும் தேவையைக் குறிப்பிடுகிறது.

இது நிறுவனத்தின் பச்சைவீட்டு வாயு தொடர்பான வடிவமைப்பு, அபிவிருத்தி, முகாமைத்துவம், அறிக்கையிடுதல் மற்றும் உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் தயாரிக்கப்பட்டது.

சர்வதேச தரநிர்ணய நிறுவனமானது ISO 162 நாடுகளின் தரநிர்ணய நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுயாதீன அரச சார்பற்ற சர்வதேச அமைப்பாகும்.

இது உலக சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும், புத்தாக்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், உறுப்பினர்கள் ஊடாக ISO அறிவுப் பகிர்வுக்காக நிபுணர்களை ஒன்றுதிரட்டுவது மற்றும் தன்னார்வ அபிவிருத்தியை முன்னெடுப்பது, புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் சர்வதேச தரம் தொடர்பான சந்தையை உறுதிப்படுத்தி வருகிறது.

BMICH ஆனது குறிப்பிட்ட காலப் பகுதியில் தனது கண்டிப்பான மற்றும் அவதானமான பச்சைவீட்டு வாயு முகாமைத்துவத்தின் மூலம் இந்த முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அது மாத்திரமன்றி, நேரடியான அல்லது மறைமுகமான வளங்கள் ஊடாக 1472.85 தொன் காபனீரொட்சைட்டை மாத்திரமே வெளியிட்டுள்ளது.

´மதிப்புமிக்க ISO14064 சான்றிதழால் இங்கையின் முன்னணி மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தும் இடமாக தெரிவுசெய்யப்பட்டு நாம் கௌரவிக்கப்பட்டுள்ளோம்.

கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது, இலங்கையர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்பவற்றுக்காக BMICH எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்று அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது´ என பேச்சாள் ஒருவர் தெரிவித்தார்.

முழுமையான பசுமை விளைவுகள் தொடர்பான 2017 பூமி மணித்தியாலங்களில் BMICH பங்கெடுத்திருந்தது.

மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளின் தேவைக்காக ஆசியாவில் அமைக்கப்பட்ட BMICH, தனித்துவம் மிக்க கட்டடக்கலை மற்றும் பரந்துவிரிந்த தோட்டங்களால் பிரபல்யம் மிக்க சின்னமாகத் திகழ்கிறது.

2016 ஆம் ஆண்டு ஜெனீவாவில் Gold Century International Quality ERA விருதை வென்றுள்ளது. அது மாத்திரமன்றி கடந்த வருடம் The South Asian Travel விருதுவிழாவில் தெற்காசியாவில் முன்னணியான சந்திப்புக்கள் மற்றும் மாநாடுகளை நடத்தும் இடம் என்ற விருதையும் பெற்றிருந்தது.

படவிளக்கம்

BMICH பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி சுனில் திசாநாயக்க (இடப்பக்கத்திலிருந்து இரண்டாவது) இலங்கை காலநிலை நிதியத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக்க ஹேமஷாந்தவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொள்கிறார்.

அருகில் பிரதம பொறியியலாளர் பாலித்த சிறிமான மற்றும் இலங்கை காலநிலை நிதியத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி சாமர ஆரியதிலக ஆகியோர் காணப்படுகின்றனர்.

Most Viewed