Back to Top

இருதய சிகிச்சை வைத்தியசாலைக்கான சைக்கியோட்டம்

இருதய சிகிச்சை வைத்தியசாலைக்கான சைக்கியோட்டம்

June 19, 2017  05:42 pm

Bookmark and Share
நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை வைத்தியசாலையினை புதிதாக நிர்மாணிப்பதற்காக இந்த செயற்திட்டம் தெய்வேந்திரா முனையில் ஆரம்பிக்கப்பட்டு பருத்தித்துறையில் இன்று நிறைவடைந்தது.

இந்த செயற்பாடு தெய்வேந்திரா முனையில் இருந்து பருத்தித்துறை வரையிலான சைக்கிள் ஒட்டம் மூலமாக நிதியினை கேகரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலையின் குழந்தைகள் மருத்துவ பிரிவின் சிகிச்சை வைத்திய நிபுணர் ரெஐினோல்ட் ரகுநாதன் தெரிவித்தார்.

இதற்காக 10 மாடி கட்டிட வசதிகள் என்பன உள்ளடங்கியுள்ளது.

இதற்காக 2 பில்லியன் நிதி உதவி தேவைப்படுகின்றது அந்த அடிப்படையில் 700 கிலோமீற்றர் சைக்கிள் பயணம் ஒன்று முன்னேடுக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் உள்ள சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் 16 பேர்கள் கொண்ட குழுவினர்கள் இவ் சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

யாழ் போதனா வைத்திய சாலையின் குழந்தைகள் மருத்துவ பிரிவின் சிகிச்சைப்பிரிவின் வைத்திய நிபுணர் ரெஐினோல்ட் ரகுநாதன். கருத்து தெரிவிக்கையில்.

பெரிய திட்டமாக ஒரு நிதி கேகரிப்பின் ஒரு திட்டமாக தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரையிலான சைக்கிள் ஒட்டமாக இவ் செயற்றிட்டம் சுகாதார அமைச்சினால் முன்னேடுக்கப்பட்டுள்ளது;. அவர் தெரிவித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

இவ் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் எஸ். சத்திய மூர்த்தி.மற்றும் யாழ் போதனா வைத்திய சாலையின் குழந்தைகள் மருத்துவ பிரிவின் சிகிச்சைப்பிரிவின் வைத்திய நிபுணர்கள்.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(அத தெரண நிருபர்)