Back to Top

Future Minds 2017 நிகழ்வுக்கு சக்தியளிக்கும் கொமர்ஷல் கிரெடிட்

Future Minds 2017 நிகழ்வுக்கு சக்தியளிக்கும் கொமர்ஷல் கிரெடிட்

July 12, 2017  02:57 pm

Bookmark and Share
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட Future Minds 2017’ கண்காட்சிக்கு தொடர்ந்தும் அனுசரணை வழங்குவதன் மூலம் சக்தியளிக்கின்றது. ´எந்தவொரு நபரும் கைவிடப்பட்டவர்கள் இல்லை´ என மிகப் பொருத்தமான தொனிப்பொருளில் அமைந்த இந்த உயர் கல்வி மற்றும் தொழில் கண்காட்சி வருடந்தோறும் பிரதான மூன்று நகரங்களில் இடம்பெறுகின்றது. உயர் கல்வி ஒன்றை அடைந்து கொள்ளும் விடயத்தில் உலகளாவிய தற்கால போக்குகளை பின்தொடர்ந்து செல்ல விரும்புகின்ற பெருமளவிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு இது நடாத்தப்படுகின்றது.

Future Minds 2017’ கண்காட்சி ஜூன் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கொழும்பு BMICH இல் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த காட்சிக்கூடங்கள் மற்றும் தகவல் மையங்கள் இந்நிகழ்வுக்கு வருகைந்த பல்லாயிரக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கண்டி KCC இல் ஜூன் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் கண்காட்சி இடம்பெற்ற வேளையிலும் இந்நிகழ்வு வழமைபோன்று பெருமளவிலான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்தது. அதன்பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி நகர மண்டபத்தில் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

´ஒரு உத்தியோகபூர்வ அனுசரணையாளர் என்ற அடிப்படையில் கடந்த 12 வருடங்களாக இந்த தேசிய கல்விசார் முன்னெடுப்புத் திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். எமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற எமது இளைஞர்கள் நாளைய தினத்தை தமதாக்கிக் கொள்வதற்கான ஒரு நுழைவாயிலாக இந்த பிரமாண்டமான முன்முயற்சி காணப்படுகின்றது. Future Minds கண்காட்சியானது இளைஞர்களுக்கு பெருமளவிலான தெரிவுகளை வழங்குவதன் மூலம் அவர்களை தொடர்ச்சியாக வழிப்படுத்தி இருக்கின்றது. வசதி குறைந்த அதிகளவான மாணவர்களுக்கு கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் கடன் திட்டங்களை வழங்கியதன் ஊடாக அவர்களுக்கு மேலும் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களது கல்விசார் எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்வதற்கான நிதியுதவியை அளிப்பதாக இக் கடன் திட்டம் காணப்படுகின்றது´ என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவன பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான திரு. ரஜீவ் காசி சிட்டி தெரிவித்தார்.

´மாணவர்கள் தமது கனவுத் தொழில்களை அடைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவர்கள் உலகத் தரம்வாய்ந்த கல்வியை அடைந்து கொள்வதற்கான ஒரு தளமேடையை இக் கண்காட்சியின் மூலம் வழங்குவதே எமது நோக்கமாகும். கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமக்கிடையே தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியளிக்கும் விலைமதிப்பற்ற ஒரு களமாக இக் கண்காட்சிகள் அமைகின்றன. இளைஞர்கள் தமது எதிர்காலத்தை செயற்றிறனான முறையில் திட்டமிட்டுக் கொள்வதற்கும் இது உதவுகின்றது. போட்டிகரமான இன்றைய உலகத்தில் சிறந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலைப் பெறுவதற்கு உயர் கல்வி என்பது ஒரு முன்-தேவைப்பாடாக காணப்படுகின்றது. இந்நிலையில், அதிகமான விளம்பர பிரசாரங்களின் ஊடாக மாணவர்கள் அடிக்கடி தவறான முறையில் வழிநடாத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியாத ஒரு முட்டுச்சந்துக்குள் கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றனர். எதிர்பார்ப்புள்ள மாணவர்களுக்கு, தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள கல்வியகங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொடுக்கும் விடயத்தில் Future Minds ஆனது ஒரு நியம முறையை உருவாக்கியிருக்கின்றது´ என்று நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்க தலைவரான திரு. சதுர லகின்டு கூறினார்.

இங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில் ஆலோசனை வழங்கலை உள்ளடக்கிய மன்றமானது, பரந்தளவிலான தொழில் ஆலோசனை அளிப்பு அமர்வுகளின் ஊடாக இளைஞர்கள் சிறந்த புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கின்றது. அத்துடன், க.பொ.த. உயர் தரம் மற்றும் சாதாரண தரத்தை நிறைவு செய்த மாணவர்களை இலக்காகக் கொண்டதாகவும் இது அமைந்துள்ளது. இந்த மாணவர்கள் முதலில் உளப்பண்பாற்றல் சார்ந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன்பின்னர், மாணவர்கள் தமக்கு அவசியமான தொழில்சார் அல்லது தனிப்பட்ட வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ள வசதியாக, பெருமளவிலான துறைசார் நிபுணர்கள், தொழில் மற்றும் தனிப்பட்ட ஆலோசகர்கள் அங்கு இருக்கின்றார்கள். துறைசார் நிபுணர்கள் பிரத்தியேகமான உளவளத்துணை மையங்களில் அமர்ந்திருக்கின்றார்கள். இந்த மையங்கள் - மனிதவளம், வங்கியியல் மற்றும் நிதி, பொறியியல், வியாபார நிர்வாகம், சந்தைப்படுத்தல், விநியோகச் சங்கிலி, உபகரண வழங்கல் போன்ற பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், முற்றுமுழுதாக திசைமுகப்படுத்தப்பட்ட மாணவர்கள் கண்காட்சி மண்டபத்திற்குள் செல்வார்கள். அதன்படி மிகவும் செயற்றிறன் வாய்ந்த உயர் கல்விப் பயணத்திற்குள் அவர்கள் காலடி எடுத்து வைப்பார்கள்.

இக்கண்காட்சியானது ஒட்டுமொத்தமாக நிதி பெறுவதற்கான தெரிவுகள் மற்றும் செலவுகள் தொடர்பான விழிப்புணர்வை வழங்குகின்றமையாலும் அதேபோன்று மாணவர்களுக்கான மிகவும் செயற்றிறன் வாய்ந்த உயர்கல்வி தெரிவுகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான வசதியை வழங்குகின்றமையாலும், இது குடும்பங்களுக்கு தகவலளிக்கும் ஒரு நிகழ்வாக அமைகின்றது.

மேலும், உலகப் போக்குகளுக்கு இணையாக, எதிர்கால தொழில் ஒன்றுக்கு அனுகூலமளிக்கும் வகையிலமைந்த ஒரு துறையை தெரிவு செய்யும் நடவடிக்கையை முன்கொண்டு செல்வதற்கான உத்வேகத்தைத Future Minds வழங்குகின்ற அதேநேரத்தில், 2017 இல் உயர் கல்விக்கான மிகச் சிறந்த ஒருங்கிணைந்த தளமேடையை உருவாக்குகின்றது. இதுவே இக்கண்காட்சியின் பிரதான நோக்கமும் ஆகும்.

பதிவுசெய்யப்பட்ட ஒரு நிதி நிறுவனமாக திகழும் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் பி.எல்.சி. நிறுவனமானது, நாடெங்கிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ள பரந்த கிளை வலையமைப்புடன் செயற்பட்டு வருவதுடன் சுமார் 35 வருடகால வரலாற்றையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பரந்துபட்ட வகைகளிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது. அவற்றுள் - நிலையான வைப்புக்கள், சேமிப்புக்கள், குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு, கல்விசார் கடன்கள், ரியல் எஸ்டேட் தொடர்பானவை, தவணைக் கடன்கள், தங்கக் கடன்கள், சுழலும் வியாபார கடன்கள், Factoring மற்றும் நுண்நிதி வசதி போன்றவை உள்ளடங்கும்.

Most Viewed