Back to Top

வெள்ளத்தால் பாதிக்கபட்ட பாடசாலை சிறுவர்களுக்கு சப்பாத்துக்களைப் பரிசளித்த கொமர்ஷல் வங்கி

வெள்ளத்தால் பாதிக்கபட்ட பாடசாலை சிறுவர்களுக்கு சப்பாத்துக்களைப் பரிசளித்த கொமர்ஷல் வங்கி

July 13, 2017  12:27 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி பதுரெலிய பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பாடசாலை மாணவர்களுக்கு 750000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்களை பரிசளித்தது.

வெள்ளத்துக்குப் பிந்தியபல்மட்ட விரிவான நிவாரணத் திட்டத்தின் ஒருஅங்கமாக இவை வழங்கப்பட்டன.

பிரதேசத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கொமர்ஷல் வங்கி நடத்திய பாதிக்கப்பட்ட தேவைகளின் மதிப்பீடுகளுக்கு இசைவாக ஐந்து பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.

ஒவ்வொரு மாணவருக்கும் சப்பாத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் கையளிக்கப்பட்டன. பதுரெலிய ஆதர்ஷ கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் இவை வழங்கப்பட்டன.