Back to Top

Ad

DELI உடன் Atlas Axillia மூலோபாய பங்காண்மை உடன்படிக்கை கைச்சாத்து

DELI உடன் Atlas Axillia மூலோபாய பங்காண்மை உடன்படிக்கை கைச்சாத்து

July 13, 2017  03:45 pm

Bookmark and Share
இலங்கையின் காகிதாதிகள் துறையில் சந்தை முன்னோடியாகத் திகழும் Atlas Axillia, சீனாவின் 1ல் தர அலுவலக காகிதாதிகள் வர்த்தக நாமமான DELI உடன் மூலோபாய பங்காண்மை உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், உயர் தரம் வாய்ந்த பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகளை நுகர்வோருக்கு விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையிலும் வளர்ந்து வரும் சந்தைகளிலும் உறுதியான நிலையை எய்துவது எனும் Atlas Axillia வின் நோக்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக DELI உடனான பங்காண்மை அமைந்துள்ளது. Atlas Axillia (முன்னர் சிலோன் பென்சில் லிமிட்டெட்) பன்முகப்படுத்தப்பட்ட வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் பிரவேசிப்பதற்காக தனது புதிய நோக்கம், தன்னேற்புத்திட்டம் மற்றும் பெறுமதிகள் குறித்த அறிவித்தல்களை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதனூடாக நுகர்வோரின் வாழ்க்கையில் பெறுமதியை சேர்க்கவுள்ளது.

சீனாவின் முன்னணி காகிதாதிகள் வர்த்தக நாமம் எனும் வகையில், 100க்கும் அதிகமான நாடுகளில் DELI உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. staplers, punchers, glu, accessories மற்றும் கணிப்பான்கள் போன்ற 3000க்கும் அதிகமான உயர் தரம் வாய்ந்த காகிதாதிகள் பொருட்களை தன்வசம் கொண்டுள்ளது. DELI உடன் Atlas Axillia ன் பங்காண்மை என்பது, நுகர்வோருக்கு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தரம் வாய்ந்த பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகள் தயாரிப்புகளை நுகர்வு செய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

6 மில்லியன் சதுர அடிக்கு அதிகமான உற்பத்தி பகுதியை கொண்டுள்ளதுடன், முழுமையாக தன்னியக்கமான உற்பத்தி சாதனங்களையும் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ள இந்த DELI மற்றும் Atlas Axillia ஆகியன பொது உள்ளம்சங்களை கொண்டுள்ளன. இவற்றில் தொடர்ச்சியான தரம், உலகத்தரம் வாய்ந்த அலங்கார வடிவமைப்பு மற்றும் உள்ளம்சங்கள், தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியன உலகின் மாறிவரும் நுகர்வோரின் தேவைகளுக்கமைய உள்ளடங்கியுள்ளன.

இந்த பங்காண்மை தொடர்பில், தெற்காசிய பிராந்தியத்துக்கான விற்பனை முகாமையாளர் பொயென் ஜியாங் கருத்துத் தெரிவிக்கையில், ´Atlas Axillia உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்நிறுவனத்தின் வியாபார செயற்பாடுகளுக்கான கையாளல்கள் மிகவும் நேர்மையானதாகவும், அதிகளவு நிபுணத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளன. மேலும் வியாபாரம் செயன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன´ என்றார். Atlas Axillia ன் தேசிய விற்பனை மாநாட்டின் போது உரையாற்றுகையில் பொயென் இதனைக்குறிப்பிட்டார். இந்நிகழ்வின் போது விற்பனை செயலணியினருக்கு DELI வர்த்தக நாமம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

Atlas Axillia ன் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் ஹம்ஸா கருத்துத் தெரிவிக்கையில், ´பரந்தளவு தெரிவுகள் என்பது விசேடமானதாகும். அலுவலக காகிதாதிகள் பிரிவினை கட்டியெழுப்புவதற்கு DELI என்பது முக்கிய பங்களிப்பு வழங்கும் எனும் காரணத்தினால், எமது வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். பொருட்கள் உயர் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், எமது விற்பனை செயலணியினர் இந்த வர்த்தக நாமத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர்´ என்றார்.

வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் தன்னிறைவை உறுதி செய்து, DELI எனும் வர்த்தக நாமத்திலமைந்த கணிப்பான்களுக்கு 2 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இலங்கையில் காகிதாதிகள் பொருட்களுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. DELI வர்த்தக நாமத்தின் ஆரம்ப நிலை அறிமுகப்பொருட்களில்calculators, staplers, punchers, correction fluid மற்றும் glue sticks போன்றன அடங்கியிருக்கும்.

Most Viewed