Back to Top

மலையகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மலையகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 15, 2017  02:21 pm

Bookmark and Share
நாட்டில் தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறந்துள்ளதுடன் பலர் நோயினால் பீதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மலையக பிரதேசத்தில் இந்த நோய்யை கட்டுப்படுத்தும் பொருட்டு நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள், நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், தொழிற்சாலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்துகொண்டு 15.07.2017 அன்று மன்றாசி நகரத்தில் பாரிய சிரமதான பணியை முன்னெடுத்தனர்

இதன் போது இப்பகுதியில் டெங்கு நோய் வரகூடிய இடங்களை இணங்கண்டு துப்பரவு செய்ததுடன் நகரத்தில் காணப்பட்ட குப்பைகளையும் அப்புறப்படுத்தப்பட்டன.

(அத தெரண நிருபர்)