Back to Top

Ad

சுற்றுலாத் துறை கலாச்சாரத்தினை பாதிக்காத வகையில் கையாளப்பட வேண்டும்

சுற்றுலாத் துறை கலாச்சாரத்தினை பாதிக்காத வகையில் கையாளப்பட வேண்டும்

July 16, 2017  03:32 pm

Bookmark and Share
நாங்கள் எமது காலச்சாரம் பண்பாடுகளை மிகவும் கட்டுக்கோப்போடு கட்டியாள்பவர்கள் என்ற ரீதியில் இந்தச் சுற்றுலாத்துறை என்பது கத்தியைக் கையாளுவது போன்று கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு துறையாக உள்ளது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமது நாடு ஆசிய காலச்சாரம் பண்பாடுகளை மிகவும் கட்டுக்கோப்போடு கையாள்கிறது என்ற ரீதியில் சுற்றுலாத்துறையை மிகவும் அவதானமாக கையாள வேண்டும்.

கத்தியைக் கையாளுவது போன்று கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு துறையாக இருக்கின்றது.

இங்கு நாங்கள் எதிர்பார்க்கின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற விதத்தில் எமது நாட்டை அல்லது எமது பிரதேசத்தை பயன்படுத்தாத வகையிலே எமது கலாச்சாரத்திற்கு இயைந்தவர்களாக இருக்கவேண்டும்.

எமது கலாச்சார சூழலை அனுபவிக்கக் கூடியவர்களாக அவர்கள் கவனமாக கையாளும் விதத்தில் அந்தச் சுற்றுலாத் துறையை ஆக்கி அளித்திட வேண்டிய மிகப் பெரிய கடினம் இந்தச் சுற்றுலாத்துறையிலே இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

(அத தெரண நிருபர்)

Most Viewed