
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை நாளை முதல் மாறுகிறது
July 16, 2017 04:51 pm
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த வைத்தியசாலையைப் பயன்படுத்தி மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக செயற்படும் எனவும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
(அத தெரண தமிழ்)