Back to Top

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - உடல்களை தானம் செய்து கடிதம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - உடல்களை தானம் செய்து கடிதம்

July 16, 2017  05:31 pm

Bookmark and Share
கர்நாடக மாநிலம், கலாபுராகி மாவட்டத்தில் உள்ள கமலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கமலாபூர்கர் (55). கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி மாவட்ட தலைநகரான கலாபுராகி நகருக்கு வந்தார்.

இங்குள்ள போர் வெல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த இவர் மனைவி பிள்ளைகளுடன் இங்குள்ள சரஸ்வதி கோடம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை இவர்கள் வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்து வீட்டினர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்துவந்த போலீசார், கதவை உடைத்து திறந்து உள்ளே சென்றபோது ஸ்ரீகாந்த் கமலாபூர்கர்(55), அவரது மனைவி தவுஸ்ரீ(50) மகன் சேத்தன்(21), மகள் சாக்‌ஷி(16) ஆகியோர் தூக்கில் பிணமாக தொடங்கி கொண்டிருந்தனர்.

தூக்கு கயிற்றில் இருந்து பிணங்களை அகற்றிய போலீசார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் கமலாபூர்கர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தில் எங்களது உடல்களை கலாபுராகி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Viewed