Back to Top

கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்

கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்

July 17, 2017  12:11 pm

Bookmark and Share
கம்பஹா மாவட்ட சுகாதார அதிகாரப் பிரிவில், இதுவரை 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இருப்பது பதிவாகியுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இடையிடையே மழை பெய்வதாலும், பொது மக்களின் போதிய ஒத்துழைப்பு இன்னும் சரியான முறையில் கிடைக்காததும், டெங்கு நோய் தொற்று பரவுவதற்கு ஏதுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா சுகாதார சேவைகள் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர், தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரொஹான் ரணசிங்க இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது விசேடமாக, நீர்கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்று மிகவும் உக்கிரமம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள், நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் மாத்திரம், டெங்கு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த எட்டு பேர் இதுவரை மரணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை சுற்றுச் சூழலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நமது வீடு மற்றும் தோட்ட சுற்றுச் சூழல்களையும் எந்நேரமும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு, "நாம்" என்ற நோக்கில் அனைவரும் இத்தருணத்தில் ஒன்றுபடுமாறும், இதற்காக வாரத்தில் 10 அல்லது 15 நிமிடங்களை ஒதுக்கி டெங்கு நோய் தொற்றை முற்றிலும் இல்லாதொழிக்க முன்வருமாறும், மருத்துவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

(அத தெரண நிருபர்)