Back to Top

Ad

மலையக மக்கள் என்றதும் வீட்டுப் பணியாளர்களை நியமிக்கலாம் என்ற நிலையை மாற்றுவோம்

மலையக மக்கள் என்றதும் வீட்டுப் பணியாளர்களை நியமிக்கலாம் என்ற நிலையை மாற்றுவோம்

July 17, 2017  03:21 pm

Bookmark and Share
மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும்.

அதனாலேய மலையக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டு வரும் போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்க்கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

பெருந்தோட்ட மக்களின் வறுமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே.

இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர்.

காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா. அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி கல்வியை புகட்டுங்கள்.

அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளபட்டு வருகின்றன. தற்போது 13 வருடங்கள் கட்டாய கல்வியாக மாற்றபட்டுள்ளது.

சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர் தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியம் என்று அவர் தெரிவித்தார்.

(அத தெரண நிருபர்)

Most Viewed