
பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம்
July 17, 2017 06:31 pm
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் இருந்த தாழையடி பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விசேட கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எதிர்வரும் 05 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடல் நீரை புதிய வழியிலான செயற்றிட்டங்கள் பற்றியும் இங்கு மிககூடிய கவனம் துறை சார்ந்த அதிகாரிகளால் முன்னேடுக்கப்பட்டன.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் 560 மில்லியன் யூரோ டொலர்கள் இதற்காக வழங்கப்படுகின்றது. இதில் 1869 குடும்பங்கள் இதன் மூலமான நன்மை பெறயுள்ளனர்.
இதன் செயற்றிட்டங்களை தொடர்பாக பிரதேச செயலாளர்கள்,மற்றும் நீர்வழங்க வடிகால் அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் கேட்றியும் நோக்கிலான இவ் செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டன..
குறித்த விடைத்திற்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றதன் நோக்கில் இவ் செயற்றிட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது என்பது கூறிப்பிடதக்கது.
இதில் வடமாகாண நீர் வழங்கல் சபையின் உதவிப்பணிப்பாளர் எஸ்.பாரதிதாசன்,மற்றும் துறைசார்ந்த நிபுணர் குழுவினர்கள்,மற்றும் பிரதேச செயலாளர்கள்,பலரும் கலந்து கொண்டனர்.
(அத தெரண நிருபர்)