Back to Top

வாழைச்சேனையில் காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனையில் காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

August 8, 2017  12:19 pm

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணியை மீட்டுத்தருமாறு கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும், அதனை தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதுவரையில் முன்வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் நகர்ப்பகுதியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் முடிந்த நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

(அத தெரண நிரூபர்)