Back to Top

கோல்டன் கீ வைத்தியசாலை அதன் பத்தாண்டு நிறைவை கொண்டாடுகின்றது

கோல்டன் கீ வைத்தியசாலை அதன் பத்தாண்டு நிறைவை கொண்டாடுகின்றது

August 9, 2017  10:56 am

Bookmark and Share
2017 ஆகஸ்ட்டில் கோல்டன் கீ வைத்தியசாலை அதன் பத்தாண்டு நிறைவை கொண்டாடுகின்றது. இந்த ஒரு தசாப்த காலத்தில் வைத்தியசாலை 40 ஆயிரம் கட்ராட் மற்றும் ஏனைய கண் சத்திர சிகிச்சைகளை நடத்தியுள்ளது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ENT சத்திர சிகிச்சைகளையும் அது நடத்தியுள்ளது.

கண் மற்றும் ENT சோதனைகளுக்கான இலங்கையின் சிறந்த சிகிச்சை வைத்தியசாலையான இந்த வைத்தியசாலை தனது மைல்கல் தசாப்தத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கண் மற்றும் ஏனைய ENT சோதனைகளுக்காக பத்து வீத கழிவினை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

வைத்தியசாலையில் பத்தாண்டு கால சேவையைப் பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட சேவையை வழங்கியுள்ளவர்களுக்கு வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கியுள்ள பங்களிப்புக்கானவெகுமதியாக ரொக்கப் பரிசுகளை வழங்கவும் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது.

கண் மற்றும் ENT சேவைகளுக்காக பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரேயொரு தனியார் வைத்தியசாலையான கோல்டன் கீ 44 படுக்கை வசதிகளைக் கொண்டது. குறிப்பிட்ட நிபுணத்துவ பிரிவுகளில் அதிகளவு வருகை தரும் வைததியர்களை கொண்ட ஒரு வைத்தியசாலையாகவும் உள்ளது. 25 கண் நிபுணர்களும் 14 ENT நிபுணர்களும் இங்கு வருகை தருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் கண் தொடர்பான நவீன கோர்னியா மற்றும் பிளாஸ்டிக் மீள் கட்டமைப்பு சத்திர சிகிச்சை முறைகளையும் ஆஸ்பத்திரி; தன் வசம் கொண்டுள்ளது. இதன் மூலம் தனது நோயாளிகளுக்கு அதி சிறந்த சேவைகளை வழங்க முடிவதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது. சத்திரசிகிச்சை நுண்கருவி, என்ஜியோபிளக்ஸ், OCT என்ஜியோகிரபி, கோர்னியா மாற்று சிகிச்சை, ஒன்றிணைந்த கட்ராட் சத்திர சிகிச்சை என்பன அண்மைக்கால அதிகரிக்கப்பட்ட வசதிகளாகக் காணப்படுகின்றன. கண் சிகிச்சையில் அதி நவீன வசதிகளுடன் மிக விரிவான சேவைகள் வழங்கப்படுவதை இது பிரதிபலிப்பதாக ஆஸ்பத்திரி பேச்சாளர் கூறினார்.

அதி நவீன தொழில்நுட்ப எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டே வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாசடைதல் மற்றும் சிக்கல் நிலை ஏற்படல் என்பன முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளன.

சகலவிதமான கண் மற்றும் ENT சோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் சத்திர சிகிச்சைக்கும் சகல விதமான நவீன உபகரணங்களையும் கொண்ட மிகவும் அர்ப்பணத்தோடு பணியாற்றும் ஒரேயொரு தனியார் பிரிவு வைத்தியசாலையாக கோல்டன் கீ திகழுகின்றது. கண் மற்றும் ENT துறையில் நிபுணத்துவ வைத்தியர்கள் குழு, அலுவலக தாதிமார் குழு என்பனவற்றின் அர்ப்பணம் மிக்க பங்களிப்போடு அது வைததியர்களை, சகலவிதமான கண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் முப்பரிமான வசதிகளுடன் கூடிய அதி நவீன சிகிச்சை இங்கு வழங்கப்படுகின்றது. Fundus Fluorescein Angiography (FFA) சோதனைகள், பண்டஸ் போட்டோகிரபி,யுரூடீ ஸ்கேன்ஸ், பார்வை கள மதிப்பீடு, பெசிமெற்ரி பைனோகுலர் ஒற்றை பார்வை சோதனை, மூக்குக் கண்ணாடி பாவனைக்கான கணினி மயப்படுத்தப்பட்ட கண் சோதனை, லேஸர் சிகிச்சை, கட்ராட் கண் சத்திரசிகிச்சை என்பன உட்பட இன்னும் பல விதமான கண் சிகிச்சைகள் இங்கு வழமையாக மேற்கொள்ளப்படுகின்றன. நீரிழிவால் ஏற்படும் கண் பிரச்சினைகள் உட்பட இன்னும் பல்வேறு விதமான கண் பிரச்சினைகளுக்கும் இங்கு நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

24 மணிநேர சேவைகளை வழங்கும் வெளிநோயாளர் பிரிவும் இங்கு உள்ளது. ஒரு ஆய்வு கூடம், ஒரு பரிசோதனைக் கூடம், மருந்து விற்பனை நிலையம் என்பனவற்றோடு ஒரே நேரத்தில் 80 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வாகன வசதியும் இங்கு உள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி வித்தியா ஜோதி பேராசிரியர் ரொஹான் டபிள்யு ஜயசேகர (தலைவர்) சிரேஷ்ட கண் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சாலிய பத்திரண, கண் சத்திர சிகிச்சை நிபுணர் சௌமியா பரணவிதாரண, கண் சத்திர சிகிச்சை நிபணர் தில்ருவணி ஆரியசிங்க, மற்றும் கண் சத்திர சிகிச்சை நிபணர் நிரன்ஜன் சில்வா (பிரதம செயற்பாட்டு அதிகாரி) ஆகியோரைக் கொண்ட ஆலோசனை சபையால் இந்த வைத்தியசாலை முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.