Back to Top

இலங்கையில் தனதுமுதல் கட்ட Apparel Tech Up ஐ ThreadSol பூர்த்தி

இலங்கையில் தனதுமுதல் கட்ட Apparel Tech Up ஐ ThreadSol பூர்த்தி

August 9, 2017  02:54 pm

Bookmark and Share
பங்களாதேஷ், இந்தியா,வியட்நாம் மற்றும் இந்தோனேசியாஆகியநாடுகளில் Apparel Tech Up வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இலங்கையில் தனது முதலாவதுApparel Tech Up ஐ ஜுலை 20ம் திகதி ThreadSol முன்னெடுத்திருந்தது. கொழும்புசினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்தநிகழ்வில்,இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுடன் சர்வதேசஆடைத்தொழில் விற்பனைமற்றும் உற்பத்திதுறைகளில் காணப்படும் போக்குகள் பற்றிகலந்துரையாடுவது நோக்காக அமைந்துள்ளது. இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவரகளுக்கு புதியதொழில்நுட்பங்களான Artificial Intelligence, Big Data மற்றும் Mobility போன்றன எவ்வாறுபயன்தரக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதுபற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

நாட்டின் 42 உற்பத்திகுழுமங்களின் 90க்கும் அதிகமானஉயர் முகாமைத்துவபிரதிநிதிகளின் பிரசன்னத்துடன்,இந்தநிகழ்வுநடைபெற்றதுடன், இவ்வாறுபங்கேற்றவர்களில்,Sirio லிமிடெட் பிரதமநிறைவேற்றுஅதிகாரிபீலிக்ஸ் பெர்னான்டோ, Hirdaramani குழுமத்தின் பணிப்பாளர் ராகில் ஹைட்ராமணி, MAS Bodyline பிரதமநிறைவேற்றுஅதிகாரிமுராட் மற்றும் ஜெஹான் முதாலிவ் மற்றும் Brandix ன் சாதிக் ஒமார்,சிராஸ் ஒமார் மற்றும் ஹாசிப் ஒமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். விருந்தினர்களில், தொழில்நுட்பசேவைவழங்குநர்களான Fast React Systems மற்றும் GSD ஆகியனவும் அடங்கியிருந்தன.

ThreadSol ன் வளர்ந்துவரும் சந்தைகளின் தலைமைஅதிகாரியானஅனாஸ் சகீலின் உரையுடன் இந்நிகழ்வுஆரம்பமாகியிருந்தது. நவநாகரீகதயாரிப்புகள் பற்றிநுகர்Nhர் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் காணப்படும் மாறிவரும் கட்டமைப்புதொடர்பில் அவர் உரையாடியிருந்ததுடன்,உற்பத்தியாளர்கள் மத்தியில் ந-வணிகத்தின் வளர்ச்சிஆற்றும் பங்களிப்புபற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்துதெரிவிக்கையில்,´உலகளாவியரீதியில் மக்களின் விருப்பங்கள் மாற்றமடைந்துவருகின்றன. Amazon (அமெரிக்காவைதளமாகக்கொண்டியங்கும் e-வணிகநிறுவனம்)அமெரிக்காவின் நவநாகரீகஆடைகள் விற்பனைதுறை சந்தையில் 6.6 சதவீதத்தைதன்வசம் கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகாலப்பகுதியில் 16.2 சதவீதவளர்ச்சியை பதிவுசெய்ய எதிர்பார்த்துள்ளது. இந்தவளர்ச்சி, சர்வதேசரீதியில் ஆடைகள் உற்பத்திசெயற்பாடுகளில் தாக்கத்தைஏற்படுத்தும். எமதுஆய்வுகளின் பிரகாரம்,15 நாடுகளின் 154 தொழிற்சாலைகளில், ஒருபருவகாலத்துக்கான நவநாகரீகங்களின் எண்ணிக்கைCAGR 17.9%ஆக அதிகரித்த வண்ணமுள்ளதைகாண முடிகிறது. 2020ல்,இன்றையநிலையில் உற்பத்திசெய்யும் நவநாகரீகங்களைபோன்று இரு மடங்கைஉற்பத்தியாளர்கள் திட்டமிடவேண்டியுள்ளதுடன்,மொத்ததொகையில் மாற்றம் இருக்காது´என்றார்.

இதனைத் தொடர்ந்து ThreadSol ஸ்தாபகபிரதமநிறைவேற்றுஅதிகாரிமனசிஜ்கங்குலியின் உரைநடைபெற்றது. 15 வருடகாலஅனுபவத்தைமனசிஜ்தன்வசம் கொண்டுள்ளதுடன், ThreadSol தயாரிப்புகள் பற்றியவிளக்கங்களைவழங்கியிருந்தார். AI, Big Data மற்றும் Mobility ஆகியன உலகின் ஆடை உற்பத்திகட்டமைப்பை எவ்வாறுமாற்றும் என்பதுபற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார். மனசிஜ் கங்குலிகருத்துத் தெரிவிக்கையில், “Big Data, Artificial Intelligence போன்றன ஆடைத்தொழிற்துறைகள் போட்டிகரமான விலையில் நிலைத்திருப்பதற்குகட்டாயம் பின்பற்றவேண்டிய முறைகளாகஅமைந்துள்ளன. தேவையான தகவல்கள் காணப்படுவதுடன், அவற்றை பிரயோகிப்பதற்குசரியான கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன என்பதுடன்,தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானமெடுத்தல்களும் அவசியமாகின்றன. ThreadSol ஐச் சேர்ந்தநாம் தொடர்ச்சியாக புத்தாக்கத்தைபின்பற்றுவதுடன், அதனூடாக எமதுவாடிக்கையாளர்களை தரமுயர்த்தபங்களிப்பு வழங்குகிறோம்´என்றார்.