Back to Top

80 நாடுகளுக்கு இலவச விசாவை அறிவித்தது கட்டார்

80 நாடுகளுக்கு இலவச விசாவை அறிவித்தது கட்டார்

August 10, 2017  10:43 am

Bookmark and Share
அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5-ம் திகதி முதல் முறித்துக்கொண்டன.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பினர்.

மேலும் கத்தார் விமானங்கள் அந்தந்த நாட்டின் வான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் கத்தார் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.