Back to Top

இளைஞர்களை தாக்கிய மதுவரி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

இளைஞர்களை தாக்கிய மதுவரி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

August 10, 2017  11:21 am

Bookmark and Share
ஹட்டன் எபோசிலி பகுதியில் இளைஞர்கள் மூவரை மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக கூறி மதுவரி திணைக்கள அதிகாரிகளின் வாகனம் முற்றுகையிடப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி கமுகவத்தை தோட்டத்திலே நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவரி திணைக்கள அதிகாரிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மூன்று இளைஞர்களை தாக்கியதாக தெரிய வருகின்றது.

தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று இளைஞர்களும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளினால் 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் அதிகாரிகளினால் மன்னிப்பு கேட்கப்பட்ட பின்னர் முற்றுகையிட்ட அதிகாரிகளின் வாகனத்தை செல்ல பிரதேசவாசிகள் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் முன்னனெடுப்பதுடன், இது தொடர்பில் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், குறித்த தோட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை இடம்பெறுவதாக தகவல் கிடைத்த நிலையில் அப்பகுதியில் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இளைஞர்கள் யாரையும் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

(அத தெரண நிரூபர்)