Back to Top

2017இன் மிஸ்டர் இங்கிலாந்தான ஜெக் ஐயர்ஸ் இலங்கை விஜயம்

2017இன் மிஸ்டர் இங்கிலாந்தான ஜெக் ஐயர்ஸ் இலங்கை விஜயம்

August 10, 2017  03:51 pm

Bookmark and Share
டோர்சட் போர்ன்மவுத்தை சேர்ந்த 28 வயதான மொடலும் தனிப்பட்ட பயிற்சியாளருமான ஜெக் ஐயர்ஸ் கடந்த மாதம் பேர்மிங்கமில் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்டின் ஆரம்பமாக உள்ள கௌரவமிக்க மிஸ்டர் இங்கிலாந்து பட்டத்தை பெற்றுக்கொண்ட முதலாவது உடலுறுப்பு துண்டிக்கப்பட்ட ஒருவராக உள்ளார்.

இந்த கவர்ச்சிகரமான நிகழ்வானது 22 இறுதிச்சுற்று போட்டியாளர்களிடையேயான மூளை மற்றும் உடல் வலிமைக்கிடையிலான போட்டியாக இருந்ததுடன், பிரித்தானிய சமூகத்தின் பெஷன் பெருமகன்கள் மற்றும் அதிசிறப்பானவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இதனை 14 ஜுலை 2017 அன்று இங்கிலாந்து முழுமையிலும் பலர் கண்டு களித்தனர்.

இலங்கையில் உயர்தரம்மிக்க ஆண்கள் ஆடையாக தன்னை நிலை நாட்டியுள்ள என்வோய் லண்டன் இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டாகவும், மிஸ்டர் இங்கிலாந்து 2017இன் பிரதான உடை பங்காளியாக திகழ்ந்தது.

´இலங்கை போன்ற சிறிய நாட்டிலுள்ள ஒரு குறியீடானது சர்வதேச சந்தையில் நுழைந்து இதுபோன்ற சர்வதேச கௌரவமிக்க நிகழ்வில் உத்தியோகபூர்வ உடை பங்காளியாக திகழ்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம். யாரும் எதிர்பாராத வகையில் இந்த உயர் போட்டியுடைய நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முதலாவது உடலுறுப்பு துண்டிக்கப்பட்ட நபராக உள்ள ஜெக் ஐயர்ஸ்ஸை குறித்து பரந்த நோக்கத்தை உருவாக்குவதையிட்டு நாம் மிகவும் சிலிர்ப்புடன் உள்ளோம். இந்த பட்டத்தை வெற்றி பெற்றதன் மூலம் செய்ய முடியாத காரியத்தை அவர் சாதித்துக்காட்டியுள்ளதுடன், இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதாரணமாக திகழ்கின்றார். கொழும்பிலுள்ள என்வோய் மென்சனில் அவரை விரைவில் வரவேற்க நாம் எதிர்பார்க்கிறோம்´ என என்வோய் லண்டன் குறியீட்டை உருவாக்கியவரும் பெஷன் தொலைநோக்காளருமான ஃபௌசுல் ஹமீட் தெரிவித்தார்.

´மிஸ்டர் இங்கிலாந்தின் வெற்றியாளராக, மிகவும் பரந்த ஆண்கள் ஆடைத் தெரிவைக் கொண்ட என்வோய் லண்டன் போன்ற உலகத்தரம்வாய்ந்த குறியீட்டுடன் இணைந்து அடையாளப்படுத்தப்படுவதை நான் கௌரவமாக கருதுகின்றேன். சொர்கத்தீவான இலங்கைக்கு விஜயம் செய்து என்வோய் லண்டனுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறேன்´ என ஐயர்ஸ் தெரிவித்தார்.

என்வோய் லண்டனின் பரந்துபட்ட சிந்தித்தலின் பண்பாடு, சகல தடைகளையும் தாண்டி அடுத்த வருடம் மிஸ்டர் வேர்ல்ட் பட்டத்தை வெல்ல திட்டமிடுள்ள இவ்வெற்றியாளரில் பிரதிபலிக்கிறது. இத்துறையில் பரந்த அனுபவத்தையும் அறிவாற்றலையும் உடைய ஃபௌசுல் ஹமீட், அணிபவரினால் மேம்படுத்தப்படும் என்வோய் லண்டன் குறியீட்டை புரட்சிப்படுத்தியுள்ளார். UK மற்றும் EUவின் IPOவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு குறியீடாக என்வோய் லண்டன் உள்ளது.

மிஸ்டர் இங்கிலாந்து 2017 ஜெக் ஐயர்ஸ், பிறப்புக் குறைபாட்டில் தனது காலை இழந்தாலும் அவரது எதிர்த்து நிற்கும் தன்மையால் உலக கௌரவத்தைப் பெற்றுள்ளார். அடையமுடியாத இலக்கை நோக்கிய தொடர்ச்சியான பயணம், உடல் ஊனமுற்ற எவரும் நுழையாத ஒரு துறையில் அவருக்கு ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது. சிறுவயதில் தீயணைப்புத் துறையில் இணைய ஆர்வமாக இருந்த இவர் தனது உடலுறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அது முடியாத காரியம் என அறிந்து கொண்டார்.

ஏனைய துறைகளில் தன்னை வெற்றிகரமாக நிலைநாட்டிய அவர், வெற்றிகரமான வாழ்விற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். உடற்கட்டை மேம்படுத்த கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட அவர் வெற்றிகரமான தனிப்பட்ட பயிற்சியாளராக மாறியதுடன், மொடல்ஸ் ஒஃப் டைவர்சிட்டியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு நியூ யோர்க் ஃபெஷன் வீக்கில் தோன்றிய முதலாவது ஆண் உடல் உறுப்பிழந்த மொடலாகவும் உள்ளார். 2012 பாராலிம்பிக்கின் ஆரம்ப தினத்தில் இவர் தோன்றியதுடன், மிலான் மற்றும் மொஸ்கோ ஃபெஷன் வீக்கிலும் இவர் பங்குபற்றியுள்ளார்.