Back to Top

மூன்றாவது வருடமாக இடம்பெறுகின்ற 'செலான்  கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017'

மூன்றாவது வருடமாக இடம்பெறுகின்ற 'செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017'

August 11, 2017  02:02 pm

Bookmark and Share
இலங்கையில் நீண்ட காலம் நிலைத்திருந்து சேவையாற்றும் வங்கிகளுள் ஒன்றாக திகழுகின்ற அதேநேரம் தனது புத்தாக்கமான வங்கியியல் தீர்வுகள் மற்றும் பரந்த வகைகளிலான குத்தகைசார் சேவைகளை வழங்குவதற்காக செலான் வங்கி பி.எல்.சி. நாடு முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது.

´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017´ (Seylan Colombo Motor Show 2017) நிகழ்வுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் பிரதான அனுசரணையாளராக இணைந்து செயற்படுவதையிட்டு பெருமிதம் அடைகின்றது.

10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற மதிப்புமிக்க இந்த கண்காட்சி ஆசியா எக்சிபிசன் அன்ட் கன்வென்சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இலங்கையில் நடைபெறும் தனியொரு மிகப் பெரிய மோட்டார் வாகனத் துறைசார் நிகழ்வு என்ற வகையில் புகழ்பெற்றுள்ள ´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017´ இனை ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

´எமது வங்கியிடமிருந்து கிடைக்கக் கூடிய மிகச்சிறந்த பெறுமதி சேர் குத்தகை திட்டங்களுடன் இலங்கை மக்களை மேலும் சென்றடையும் நோக்கிலேயே இந்த தேசிய மட்டத்திலான நிகழ்வுடன் நாம் கைகோர்த்திருக்கின்றோம்.

´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017´ நிகழ்வுடனான எமது பங்காளித்துவமானது,

எதிர்கால வாகன கொள்வனவாளர்கள் தங்களது கனவு வாகனத்தை இலகுவான மற்றும் சிரமமற்ற முறையில் உரிமையாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி, இந்த கண்காட்சிக்கு வருகை தருவதன் மூலம் எண்ணிலடங்கா சாத்தியக் கூறுகள் மற்றும் தமக்குப் பொருத்தமான மிகச் சிறந்த வாகனத் தெரிவுகளை கண்டறிந்து கொள்ளுமாறு நாம் வாகன ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு ஏற்ற வகையில் செலான் குத்தகை திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த சேவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்´ என்று செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் தலைமை அதிகாரியான திரு.காமிக டி சில்வா கூறினார்.

மோட்டார் வாகனத் துறை மற்றும் உலகளாவிய தரநியமங்களுக்கு அமைவான அதனது விரைவான முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு களமாக ´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017´ செயற்படும். பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சியதாக அமைந்திருக்கும் இவ் வருடாந்த கண்காட்சி.

இந்த பிராந்தியத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகின்ற அதேநேரத்தில், எண்ணிலடங்கா வகைகளிலான காட்சிக் கூடங்களையும் காட்சிப்படுத்துனர்களையும் கொண்டதாக காணப்படும். ´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2016´ இன் மாபெரும் வெற்றி.

உள்நாட்டில் மிகச் சிறந்த துறைசார் நிறுவனங்களுடன், இத்துறையுடன் தொடர்புபட்ட உலகப் புகழ்பெற்ற சந்தை முன்னணி நிறுவனங்கள் பலவற்றையும் தம்பக்கம் கவர்ந்திழுத்துள்ளது.

´இக் கண்காட்சியின் போது, வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக செலான் குத்தகை சேவையை ஊக்குவிப்பதில் செலான் வங்கி தொடர்ச்சியாக முக்கியமானதொரு பங்கை வகிக்கும்.

எதிர்கால வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, ´On the Spot´ குத்தகை வசதியின் மூலம் அந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை வங்கி மேற்கொள்வதுடன், இந்த கண்காட்சியின் பிரதான அம்சமாகவும் இந்நடவடிக்கை காணப்படும்.

இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் விஷேட வட்டி வீதத்திலும் நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்ட வசதியுடனும் நிதிக் குத்தகை வசதிகளை வினைத்திறனாகவும் இலகுவாகவும் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் விதத்தில், செலான் வங்கியானது புதிய வகை வர்த்தக குறியீடுகளிலான வாகனங்களுக்காக கவர்ச்சிகரமான குத்தகைப் பொதிகளை வழங்குவதற்காக பல்வேறு முக்கியமான வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பங்காளியாக ஒன்றிணைந்து செயற்பட இருக்கின்றது´ என்று செலான் வங்கியின் நுகர்வோர் நிதிப் பிரிவு தலைமை அதிகாரியான திரு. டெல்வின் பெரேரா குறிப்பிட்டார்.

இலங்கையில் மிகவும் சமூகம் சார்ந்த ஈடுபாடுடைய வங்கி என்ற அந்தஸ்தை செலான் வங்கி தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் ´அன்புடன் அரவணைக்கும் வங்கி´ என்ற அதனது தோற்றப்பாட்டை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ´செலான் கொழும்பு மோட்டார் வாகனக் கண்காட்சி 2017´ காணப்படுகின்றது.

இக் கண்காட்சிக்கு வருகைதரும் பார்வையாளர்கள் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான மிகவும் பரந்தளவிலான, தற்கால நடைமுறைசார்ந்த செயற்பாடுகளையும், வங்கியின் உற்பத்தி மற்றும் சேவைத் தொடரில் உள்ள பல்வேறு முக்கிய சேவைகளையும் அறிந்து கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

செலான் வங்கியின் மனங்கவரும் குத்தகைச் சேவைப் பொதிகள், இக் கண்காட்சிக்கு வருகைதருவோரின் விருப்பங்கள், தேவைகளை நிவர்த்தி செய்கின்ற விதத்திலும் அவர்களது வாழ்க்கைப் போக்குகளை மேம்படுத்தும் வகையிலும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

செலான் வங்கி நாடளாவிய ரீதியில் சேவை வழங்கும் 167 கிளைகளையும் 193 யுவுஆ மையங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அதேநேரத்தில, கூட்டாண்மை, தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரம் உள்ளடங்கலாக மேலும் பல தரப்பினரை உள்ளடக்கிய அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டியங்குகின்றது.

வங்கியின் பரந்தளவான வங்கியியல் சேவைகளுக்கு அதனது டிஜிட்டல் சேவை வழங்கல் வழிமுறைகளான – 365 நாள் வங்கியியல், நேரடி உரையாடல் ஒத்துழைப்பு, மற்றும் வட்ஸ்அப், பேஸ்புக், மெசன்ஜர் ஊடான வாடிக்கையாளர் ஒத்துழைப்பு மற்றும் ஒன்லைன் மூலமான கணக்குத் திறத்தல் சேவை போன்றவற்றின் ஊடாக ஆதரவளிக்கப்படுகின்றது.

புகைப்பட விளக்கம்:

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் தலைமை அதிகாரியான காமிக டி சில்வா (இடமிருந்து இரண்டாவதாக) அனுசரணைக்கான காசோலையை குறிக்கும் விதத்திலான மாதிரியுருவை ஆசியா எக்சிபிசன் அன்ட் கன்வென்சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஃ முகாமைத்துவப் பணிப்பாளர் டிரோன் சந்திரசேகரவிடம் கையளிப்பதைக் காணலாம்.

மேலும் புகைப்படத்தில் (இடமிருந்து வலமாக) செலான் வங்கியின் நுகர்வோர் நிதிப் பிரிவு தலைமை அதிகாரியான டெல்வின் பெரேரா, ஆசியா எக்சிபிசன் அன்ட் கன்வென்சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுபோத தசநாயக்க ஆகியோரும் காணப்படுகின்றனர்.