Back to Top

பலூனை விழுங்கியதால் 8 மாத குழந்தை பரிதாப பலி

பலூனை விழுங்கியதால் 8 மாத குழந்தை பரிதாப பலி

August 11, 2017  03:45 pm

Bookmark and Share
மராட்டியம் மாநிலம் நாசிக் பகுதியில் கூலி வேலை செய்யும் ஒருவரின் 8 மாத குழந்தை நேற்று விளையாடிக் கொண்டிருக்கும் போது தரையில் கிடந்த ரப்பர் பலூனை விழுங்கிவிட்டது.

அதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

குழந்தையின் நிலைமை மிகவும் மோசமானதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர். ஆனந்த் பவார் கூறுகையில், ரப்பர் பலூன் குழந்தையின் மூச்சுக் குழலில் சிக்கிக் கொண்டது.

அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் குழந்தை மரணமடைந்தது என கூறினார்.

குழந்தையின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம்பட் பகுதி பொலிசார் தெரிவித்தனர்.

குழந்தையின் பெற்றோர் உத்தரபிரதேதச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.