Back to Top

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி - பெண் உட்பட 5 பேர் பலி

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி - பெண் உட்பட 5 பேர் பலி

August 11, 2017  07:20 pm

Bookmark and Share
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தார்கள்.

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்திலிருந்து இன்று யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பதாயுலி கிராமத்திற்கு அருகில் சென்றபோது, ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

இதில் இரண்டு பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்தன.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பெண் உட்பட 2 பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர் என மல்பூரா காவல் நிலைய அதிகாரி ரமேஷ் பரத்வாஜ் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து டிரைவரும் பலியானது குறிப்பிடத்தக்கது.