Back to Top

இந்தியப் பிரஜைகள் மூவர் கைது

இந்தியப் பிரஜைகள் மூவர் கைது

August 12, 2017  11:44 am

Bookmark and Share
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் முன்று பேர் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்தியப் பிரஜைகள் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் சாரதிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூவரும் இந்தியாவின் தமிழ்நாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(அத தெரண தமிழ்)