Back to Top

மண் மேடு விழுந்ததில் சுரங்கப் பணியாளர் மரணம்

மண் மேடு விழுந்ததில் சுரங்கப் பணியாளர் மரணம்

August 12, 2017  03:03 pm

Bookmark and Share
பலாங்கொடை பிரதேசத்தில் சுரங்கம் ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்ததால் உயிரிழந்துள்ளார்.

மண்ணில் புதைந்த குறித்த நபரை பலத்த காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை, பிட்டியதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(அத தெரண தமிழ்)