Back to Top

வரட்சியால் கிளிநொச்சியில் பல குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை

வரட்சியால் கிளிநொச்சியில் பல குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை

August 12, 2017  03:37 pm

Bookmark and Share
வரட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவது குடிநீர்ப் பிரச்சனையாகும்.

இதனால் மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயாலாளர் பிரிவு அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவாகும்.

பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 க்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக உள்ளது. இந்த நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப் பிரதேச சபை ஆகியன இணைந்து, குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன.

எனினும் வரட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பங்களில் 2160 குடும்பங்களுக்கு மாத்திரம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் 3444 குடும்பங்களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலக துணைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர், கிளிநொச்சி மாவட்டத்தின் வரட்சி நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து மக்களுக்கு உதவுவதற்காக பிரதேச செயலாளரை சந்தித்திருந்த போது, பிரதேச செயலாளரினால் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் செஞ்சிலுவை சங்கத்தின் தலைமைச் செயலக துனைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர், பூநகரிப் பிரதேசத்தின் கறுக்காய்த்தீவு மற்றும் ஞானிமடம், செட்டியகுறிச்சி போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

(அத தெரண நிரூபர்)