Back to Top

ஹட்டனில் போதைப் பொருட்களுடன் 06 பேர் கைது

ஹட்டனில் போதைப் பொருட்களுடன் 06 பேர் கைது

August 12, 2017  10:07 pm

Bookmark and Share
மாவா போதைப்பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்கள் ஒரு தொகையை கைப்பற்றியதுடன் அதனோடு தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பஸ் தரிப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதை பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (12) மதியம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை மாவா போதைப்பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதைப்பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்களுமாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத தெரண நிரூபர்