Back to Top

வடக்கின் குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் வேண்டும்

வடக்கின் குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் வேண்டும்

August 13, 2017  03:31 pm

Bookmark and Share
நாட்டின் நீதியும், சட்டமும் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் புதிய கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதற்காக பொருளாதார ரீதியான மாற்றங்களை தற்போது நீதித்துறை கண்டு வருகின்றது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

வடமாகாண குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அது தான் எதிர்காலத்திலும் சிறந்த பலாபயன்களை ஏற்படுத்தும்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் சட்ட பீடத்தின் ஏற்பாட்டில் ´நீதியின் மறுமலர்ச்சியில் மக்களின் எதிர்காலத்தின் தன்மை´ என்னும் கருப்பொருளில் நீதம் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட பிராத்திய அமைப்பாளரும் ஐனாதிபதியின் சட்டத்தரணியும் ஆகிய சாந்தா அபிமன்யுசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நீதித்துறை வினைத்திறனாக செயற்படவேண்டும் என்பதில் எந்த ஒரு ஐயம் இல்லை குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

அவதானம் செலுத்தப்படுவது வேறும் தண்டனை வழங்குவதற்கு அர்த்தப்படாது என தெரிவித்தார்.

சமகால அரசியலில் நீதித்துறையின் பங்குகள், புதிய அரசியலமைப்பின் பின்னர் நீதித்துறைகளின் மாற்றங்கள், நீதித்துறையினால் ஏற்பட்டிருக்கு மறுமலர்ச்சியில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை போன்ற விடையங்களை மையப்படுத்திய தலைப்புகளில் 426 பக்கங்களை கொண்டுள்ள நூலகவும் இவ் நீதம் மலர்காணப்படுகின்றது இதனை சட்ட பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.

இதன் முதற்பிரதியினை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்கினேஸ்வரன் வெளியீட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றுக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்கினேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி க.கனேஸ் ராசா, யாழ் பல்கலைகழக கலைப்பீட பீடாபதி எஸ்.சுதாகர், சட்டபீட பீடாபதி ம.குருபரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம்,பல்கலைகழக சட்டபீட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.