Back to Top

Ad

பெட்ரோல் ரக கார் உற்பத்திக்கு தடை: சீனா ஆலோசனை

பெட்ரோல் ரக கார் உற்பத்திக்கு தடை: சீனா ஆலோசனை

September 11, 2017  11:46 am

Bookmark and Share
பெட்ரோல், டீசல் போன்ற திரவ எரிபொருளில் இயங்கும் கார்களின் உற்பத்திக்கு முற்றிலுமாகத் தடை விதிப்பது குறித்து சீனா ஆலோசித்து வருவதாக அந்த நாட்டு தொழில்துறை இணை அமைச்சர் ஜின் குவோபின் தெரிவித்தார்.

இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி நாளேடான பீப்பிள்ஸ் டெய்லி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பது: பெட்ரோல், டீசல் போன்ற பாரம்பரியமான திரவ எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் மாசு ஏற்படுத்தி வருகின்றன.

எனவே அதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் கொள்கையளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திரவ எரிபொருள் ரகக் கார்களை உற்பத்தி செய்யத் தடை விதிப்பதுஇ மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை விரைவில் அரசு வெளியிடும் என்றார் அவர்.

வாகன எண்ணிக்கையைப் பொருத்தவரையில்இ உலகில் முதலிடத்தில் சீனா உள்ளது.

அந்நாட்டு மோட்டார் வாகனத் துறையில் ஏற்படும் மிகப் பெரும் மாற்றம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

பிரான்ஸில் பெட்ரோல்இ டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு 2040-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2030-இல் முற்றிலுமாக மின்சார வாகனங்களுக்கு மாறப் போவதாக அறிவித்துள்ளது.

Most Viewed