Back to Top

20 ஆண்டுகள் உன்னத பணியாற்றிய பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரி டி.பி.குமாரகே பணியிலிருந்து ஓய்வு

20 ஆண்டுகள் உன்னத பணியாற்றிய பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரி டி.பி.குமாரகே பணியிலிருந்து ஓய்வு

September 11, 2017  04:02 pm

Bookmark and Share
வங்கிசாரா முன்னணி நிதித்தாபனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி டி.பி.குமாரகே, தனது 20 வருட உன்னத தொழில் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

நாட்டின் முன்னணி வங்கிசாராத நிதி நிறுவனம் எனும் நிலைக்கு பீப்பல்ஸ் லீசிங் நிறுவனத்தை தரமுயர்த்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

இவருக்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு, PLC0 தலைமை அலுவலகத்திலும், இதர கிளைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. PLC க்கு வழங்கியிருந்த அளப்பரிய சேவை மற்றும் நாட்டின் லீசிங் துறைக்கு புத்தாக்கங்களினூடாக மேற்கொண்டிருந்த பெறுமதி சேர்ப்பு போன்றவற்றுக்கு கௌரவிப்பு செலுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் வங்கியின் உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் 1995 ல் நிறுவப்பட்ட போது, லீசிங் வியாபாரத்தின் பெருமளவு சந்தைப்பங்கு வங்கிசாரா நிதித்துறை வசம் காணப்பட்டது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி குமாரகே குறுகிய காலப்பகுதியில் நாட்டின் வங்கிசாரா நிதியியல் துறையில் சந்தை முன்னோடி எனும் நிலைக்கு நிறுவனத்தை தரம் உயர்த்தினார்.

இவரின் தூரநோக்கான சிந்தனை மற்றும் தலைமைத்தும் ஆகிய பண்புகள் 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக லீசிங் துறையில் முன்னோடி எனும் நிலையை பீப்பள்ஸ் லீசிங் கொண்டிருக்க வழிகோலியிருந்தன.

1997ல் PLC ன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃ பொது முகாமையாளர் எனும் நிலைக்கு குமாரகே தெரிவானார். தாம் ஓய்வு பெறும் வரை, இவர் ஊழியர்களின் உறுதுணையுடன் அர்ப்பணிப்புடனும் பெருமளவு ஈடுபாட்டுடனும் செயலாற்றியவராவார்.

குமாரகே தனது திறனில் PLC ன் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியது மட்டுமின்றி, ஊழியர்களின் நலன்புரிச் செயற்பாடுகளிலும், நாட்டின் லீசிங் துறையில் புத்தாக்கங்களை சேர்த்திருந்தமை மூலமாகவும், நாட்டின் போக்குவரத்து துறைக்கு பெறுமதி சேர்ப்பது மற்றும் சமூகத்தின் நலன்புரிச் செயற்பாடுகளை கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளினூடாகவும் முன்னெடுத்திருந்தார்.

குமாரகேயினால் லீசிங் வியாபாரத்துக்கு அப்பால் புத்தாக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

உதாரணமாக, அரசாங்க நிறுவனங்களில் பின்பற்றப்படும் வருடாந்த சம்பள அதிகரிப்பு திட்டத்துக்கு மாறாக, PLC ல் வினைத்திறன் அடிப்படையிலான கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்திருந்ததை குறிப்பிடலாம்.

PLC ஊழியர்களின் அர்ப்பணிப்பை மேம்படுத்தவும், ஈடுபாட்டை அதிகரிக்கவும் இந்த முறை பெரிதும் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், நிறுவனம் பெருமளவு வருமானத்தை பெற்றுக்கொண்டதுடன், தனது வாடிக்கையாளர் இருப்பையும் அதிகரித்துக் கொண்டது.

வியாபார ஒழுக்கவியலுக்கு பெருமளவு மதிப்பளித்தவராக டி.பி.குமாரகே திகழ்ந்தார்.

வருமானமீட்டல் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வாடிக்கையாளர்களுடன் நட்புறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் அவர் ஊக்குவித்திருந்தார்.

வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதனூடாக நிறுவனத்தின் சந்தைப்பங்கை தொடர்ந்து உயர் மட்டத்தில் பேண முடியும் என்பதில் அவர் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார். தனது வாடிக்கையாளர்களை PLC உண்மையான வர்த்தக நாமத்தூதுவர்களாக அவர் கருதினார்.

குமாரகேயினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த சமூக பொறுப்புணர்வு வியாபாரக் கொள்கை, நாட்டின் சிறிய, நடுத்தரளவு வியாபாரத்துறையில் மலர்;ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டின் பேருந்து உரிமையாளர்களுக்காக விசேட கடன் திட்டங்களை குமாரகேயின் தலைமைத்துவத்தில் PLC அறிமுகம் செய்திருந்தது, இதனூடாக நாட்டின் போக்குவரத்துத் துறையை மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருந்தது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் PLC பெருமளவு தங்கியுள்ளதுடன், நிறுவனம் தொடர்ந்தும் அந்த ஸ்தானத்தை பேணி வருகிறது.

குமாரகே கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் வசதிகளை மேம்படுத்த கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

20 வருட காலப்பகுதியினுள், பின்தங்கிய வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த அவர் பங்களிப்பு வழங்கியிருந்ததாக கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளினூடாக அவர் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

மக்களின் சமூகத்தரத்தை மேம்படுத்துவதில் எப்போதும் கவனம் செலுத்தியிருந்தார்.

நாட்டின் வட பகுதியின் மறுமலர்ச்சியில் குமாரகே தனது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், கொடிகாமம் புகையிரத நிலையம் மற்றும் மதவாச்சி பேருந்து நிலையம் ஆகியவற்றின் மீள நிர்மாண செயற்பாடுகளுக்கு மக்கள் வங்கியுடன் இணைந்து பங்களிப்பு வழங்கியுள்ளார்.

அனைத்துக்கும் மேலாக டி.பி.குமாரகே ஒரு சிறந்த பண்பாளர் என்பதுடன், மனித நேயம் கொண்ட சிறந்த தலைவராவார்.

படங்கள்

1. பீப்பள்ஸ் லீசிங் கம்பனி பிரதம நிறைவேற்று அதிகாரி சப்ரீ இப்ரஹிம், டி.பி.குமாரகே அவர்களுக்கு நினைவுச்சின்னமொன்றை வழங்குகிறார்.

2. டி.பி.குமாரகே

Most Viewed