Back to Top

ஒடெல்லின் புதிய பொட்டனிகா இளையுதிர் கால தெரிவுகள் இயற்கையோடு இணைந்து உத்வேகத்தையும் அளிக்கின்றது

ஒடெல்லின் புதிய பொட்டனிகா இளையுதிர் கால தெரிவுகள் இயற்கையோடு இணைந்து உத்வேகத்தையும் அளிக்கின்றது

September 11, 2017  06:52 pm

Bookmark and Share
உலகம் முழுவதும் நவநாகரிக வடிவமைப்பாளர்களை இயற்கை தொடர்ந்து ஆட்கொண்டுள்ளது.

சூழலோடு இணைந்து தமது படைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் அவர்களது முயற்சிகள் 2017 ஒடெல் இலையுதிர்கால தெரிவுகளில் சிறப்பாக பிரதிபலித்துள்ளன.

தாவரவியல் வடிவங்களையும் நிழல்களையும் பிரதிபலிக்கும் வகையில் உலகின் மிகச் சிறந்த வடிவமைப்புக்களில் இருந்து இந்தத் தெரிவுகள் அமைந்துள்ளன.

பல்மெயின், ஜுஸி, வெலன்டினோ, பிராடா, எலிசாப், ஜேஸன் வூ என இந்த வடிவமைப்பாளர் பட்டியல் தொடருகின்றது.

போடானிகா என்ற தொனிப்பொருளில் இவை தொகுக்கப்பட்டு உள்ளக அலங்காரங்களாகவும் வடிவங்களாகவும் காட்சி தருகின்றன.

கிரீப்,மேட் செடின் சில்க், டுவீட், ஒர்கன்ஸா, சிபொன், பெனல், ஜேர்ர்ஜட் என பல்வகை துணிகளால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இயற்கையான தாவரவியல் வடிவங்களையும் உணர்வுகளையும் உருவாக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.

மலர்கள், தாவரங்கள், நிலவரைபுகள், பூச்சிகள் ஏனைய மிருகங்கள் என சுற்றாடலுடன் கலந்த இயற்கை எழிலை கொண்டதாக தொழில் நுட்பத்தின் முன்னேற்த்தையும் உள்ளடக்கியதாக புதிய தெரிவுகள் அமைந்துள்ளன.

காக்கி பச்சை, ஆரஞ்சு, கபில நிறம்;, சாம்பல், இருண்ட நீளம், வெள்ளை, பேஜ் நிறம் மற்றும் ஏனைய புவிநிழல்களின் சாயல்களை இவை நிறங்களாகக் கொண்டுள்ளன.

இவை உள்ளுர் அமைப்புக்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்புடையதாய் அமைந்துள்ளன.

ஓடெல் வாடிக்கையாளர்கள் தமது ஆடைத் தெரிவு மற்றும் ஏனைய உபரிகளின் தெரிவோடு திருப்தி அடையக் கூடிய விதத்தில் இவை அமைந்துள்ளன.

´பொடனிகா தெரிவானது மிகவும் சுவாரஸ்யமானது. காரணம் இது புத்துணர்வையும் உற்சாகத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

நுவநாகரிக தொழில்துறை என்பது உலகை வெல்லும் நிலையில் உள்ளது´ என்று கூறினார்.

ஒடெல் தொடர் நிறுவனங்களின் உரிமை நிறுவனமான சொப்ட் லொஜிக் குழுமத்தின் சந்தைப் படுத்தல் பணிப்பாளர் டேஸிரி கருணாரத்ன.

´நிலைபேறு யுகத்தில் நவநாகரிகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வதில் ஒடெல் குழுமமும் மிக ஆழமாக ஈடுபட்டுள்ளது.

போடனிகா தெரிவானது பசுமை நவநாகரிகத்துக்கான ஒரு உதாரணமாகும். எமது இந்தப் புதிய பிரசார கருப்பொருள் சுற்றாடலிலும் கவனம் செலுத்தியுள்ளது´ என்று அவர் மேலும் கூறினார்.

எப்போதும் போலவே ஒடெல்லின் இலையுதிர்கால தெரிவுகளை நாடு முழுவதும் உள்ள எல்லா காட்சியகங்களிலும் பெற்றுக் கொள்ளமுடியும்.

வயது, பால் மற்றும் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப தெரிவுகள் உள்ளன.

அத்தோடு இந்தத் தெரிவுகளுக்குப் பொருத்தமான சப்பாத்துக்கள் கைப்பைகள் மற்றும் ஏனைய அலங்கார உபரிபொருள்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் நவநாகரிகத்துக்கும் வாழ்வியலுக்கும் வரைவிலக்கணம் வகுக்கும் நிலையமான ஒடெல் மெஜஸ்டிக் சிற்றி, கிரஸ்கெட் நுகேகொடை கொஹுவலை, தலவத்துகொடை, கல்கிஸ்ஸ, மொறட்டுவை, பாணந்துறை, பத்தரமுல்லை, வத்தளை, ஜாஎல (கே ஸோன்) கிரிபத்கொடை, களுபோவில (ஒடெல் ஹோம்) கண்டிசிற்றிசென்டர், கொழும்புடச் ஹொஸ்பிடல் வளாகத்தில் உள்ள லவ்.எஸ்.எல், கிரஸ்கட், கிரஸ்கெட் கொழும்பு, சென்ட்டரா சீசேன்ட்ஸ் றெஸோட் அன்ட் ஸ்பாபெந்தோட்டை, காலிகோட்டை, குயின்ஸ் ஹோட்டல் கண்டி, நீர்கொழும்பு மற்றும் பின்னவலை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களிலும் காட்சி அறைகளைக் கொண்டுள்ளது.

Most Viewed