Back to Top

ஆடம்பர வாகனங்களுக்கான பிரீமியம் டயர்கள் மூலம் புதிய உச்சத்தை தொட்டுள்ள சியெட்

ஆடம்பர வாகனங்களுக்கான பிரீமியம் டயர்கள் மூலம் புதிய உச்சத்தை தொட்டுள்ள சியெட்

September 12, 2017  11:27 am

Bookmark and Share
ஐரோப்பாவில் பிரீமியம் வகை வாகனங்களுக்கான சந்தையில் பிரவேசித்து வெற்றிகரமான ஓராண்டு கழிந்துள்ள நிலையில், சியெட் இலங்கையிலும் பாரிய வகை வாகனப் பிரிவில் பிரவேசித்து உலக கீர்த்திமிக்க வாகனங்களுக்கான ரேடியல் டயர் உற்பத்திப் பிரிவில் ஈடுபட்டுள்ளது.

முன்னணி ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய உற்பத்திகளுக்கான ரேடியல் டயர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சியெட் நான்கு புதிய அளவிலான டயர்களை அறிமுகம் செய்துள்ளது. பயணிகள் கார் வரிசையில் சந்தையில் ஏற்கனவே முன்னணி வகிக்கும் சியெட் பிஎம்டபிள்யு, மெர்சடஸ் பென்ஸ்,அவ்டி,லேண்ட குரூஸர் பிராடோ ஆகியவற்றுக்கான டயர் தேவையிலும் கவனம் செலுத்தியுள்ளது.

சியெட்டின் இந்த வகைப்பிரிவுக்கான டயர்கள் ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் விரிவான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டன. செகுரா டிரைவ்( 20/55 R 16 அளவு) ஸ்போர்ட்ஸ் டிரைவ் ( (215/45 R17 மற்றும் (215/45 R17 அளவுகள்) CZAR All Terrain(265/65 R 17அளவு) என்பன செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி பார்க் ஸ்ட்ரீட் மிவ்ஸ் இல் கோலாகலமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்த டயர்கள் தற்போது 17 ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையாகின்றன. அத்தோடு இலங்கையில் ரேடியல்டயர்களின் வகைகளை 44 அளவுகளாக அதிகரித்துள்ளது. 20 ஆயிரம் கிலோ மீற்றர் வரை தொழிற்சாலை ரீதியான பிரச்சினைகள் ஏதாவது காணப்பட்டால் ஒன்றுக்கு ஒன்று ஈடாக வழங்கப்படும் உத்தரவாதம் உள்ளது.

இந்த புதிய அறிமுகங்களுக்கான கூட்டத்தில் பேசிய சியெட் களனி இன் முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் ´இந்த டயர்கள் சர்வதேச அரங்கில் சியெட் முத்திரையின் தொழிற்சார் பண்புகளை மட்டும் பிரதிபகலிக்கவில்லை. இந்தப் பிரிவில் இலங்கை சந்தையில் இருந்த இடை வெளியையும் அது நீக்குகின்றது. உள்ளுர் சந்தையில் பல்வேறு வகைகளுக்கான டயர் பிரிவுகளில் அதி உயர் விற்பனையைக் கொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரை என்ற வகையில் பிரீமியம் பிரிவில் எமது நிலையை மேலும் தக்கவைத்துக் கொள்ள இது வழிவகுத்துள்ளது´ என்று கூறினார்.

சியெட் செகுரா டிரைவ் டயர்கள் நீளமான பள்ளங்களுடன் தண்ணீரை எதிர்த்துப் போராடி பயணம் செய்யும் ஆற்றல் கொண்டவை. திடமான சமநிலை தண்ணீரிலும் பிறேக்கிற்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் என்பன இதன் சிறப்புக்களாகும். நவீன தொழில்நுட்பம் மேலதிக மைல் தூர ஓட்டத்தையும் உறுதி செய்கின்றது. கணினி மயப்படுத்தப்பட்ட வடிவமைப்புக்கள் காரணமாக ஓசை அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவை வேகமான ஓட்டத்துக்கு மிகவும் பாதுகாப்பானவை.

அதி உயர்தர செயற்பாடு கொண்ட சியெட் ஸ்போர்ட்ஸ் டிரைவ் வகைகள் மிகவும் சுறுசுறுப்பான செயற்பாடுகள் கொண்டவை. வாகனத்தை ஓட்டிச் செல்லும் சகல விதமான நிலைகளுக்கும் இது ஈடுகொடுக்கக் கூடியது. மிகவும் முன்னேற்றகரமான அதி நவீன வடிவமைப்பு மிகக் குறைவான சக்தி செலவில் ஆகக் கூடுதலான வேக ஓட்டத்துக்கு இடமளிக்கின்றது.

ஈரமான மற்றும் வரண்ட நிலைமைகளுக்கான உலக மட்ட பரிசோதனைக்கு இந்த இரு வகைகளும் உற்படுத்தப்பட்டுள்ளன. இரு நிலைகளிலுமான பிறேக் வசதி, ஏனைய வசதிகள், ஓசை , பாவனைத் தன்மை என எல்லா சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

சியெட் களனி ஹோல்டிங்ஸ் இலங்கையின் வாயு மூலமான டயர் தேவையில் அரைவாசியைப் பூர்த்தி செய்கின்றது. அதன் உற்பத்திகளில் மூன்றில் ஒரு பங்கை மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. றேடியல், வர்த்தக நோக்கு, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, விவசாய உபகரண பிரிவு என அதன் உற்பத்திகள் விரிவாக அமைந்துள்ளன.

றேடியல் பிரிவில் 32 வீத சந்தைப் பங்கு, டிரக் மற்றும் இலகு டிரக் பிரிவில் 51 வீத சந்தை பங்கு, முச்சக்கரவண்டி பிரிவில் 54 வீத சந்தைப் பங்கு, மோட்டார் சைக்கிள் பிரிவில் 22 வீத சந்தைப் பங்கு, விவசாய டயர் பிரிவில் 72 வீத சந்தைப்பங்கு என்பனவற்றையும் சியடெ கொண்டுள்ளது

Most Viewed