Back to Top

கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய திட்டம்

கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய திட்டம்

September 12, 2017  02:27 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கிகிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதகாலத்துக்கான புதியஊக்குவிப்புத் திட்டம் அறிமுகமாகியுள்ளது..‘Spend More Win More’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் மூன்றுமில்லியன் ரூபாபெறுமதியானபட்டியல் கொடுப்பனவுகளைவழங்கவங்கி முடிவுசெய்துள்ளது. இதற்குமேலதிகமாக கிரடிட்கார்ட் வைத்திருப்பவர்களுள் செப்டம்பர்,அக்டோபர்மற்றும் நவம்பர்மாதங்களில் மாதாந்தம் மூவர்வீதம் ஒன்பதுபேருக்கு புத்தம் புதியகலக்ஸி S8 தொலைபேசிகளை வெல்லும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.

கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்டமாஸ்டர்கார்ட் அல்லதுவிஸா கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இந்தப் பரிசுகளைவெல்லும் தகுதியைப் பெறதமதுகிரடிட் கார்ட் மூலம் 20 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டதொகையை செலவுசெய்யவேண்டும். ஓவ்வொரு 20 ஆயிரம் ரூபாஅல்லதுஅதன் மடங்குகள் செலவிடப்படும் போது பரிசைவெல்லும் வாய்ப்பு அதற்குஏற்ப அதிகரிக்கும் என வங்கி அறிவித்துள்ளது. கிரடிட் கார்ட்டுகளைவைத்திருக்கும் தகுதியான 50 பேருக்குமாதாந்தம் 20 ஆயிரம் ரூபாவுக்கானபட்டியல் கொடுப்பனவுகளும் செய்யப்படும்.

´வாழ்க்கையின் சிறந்ததருணங்களைவாடிக்கையாளர்களுக்குவழங்குவதில் கொமர்ஷல் வங்கிகார்ட்டுகள் அதிககவனம் செலுத்துகின்றன. Spend More Win More’ திட்டத்தை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒருபுதியஅனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம்´என்று கூறினார்வங்கியின் கார்ட் மத்தியநிலையத்தின் தலைவர் துஷிதசுரவீர. இந்த உன்னதவாய்ப்புக்கு மேலதிகமாக எமதுகார்ட் வாடிக்கையாளர்களுக்கு பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது. இது இந்தவருடம் முழுவதும் அவர்கள் வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கவும் வழிவகுக்கும் என்று அவர்மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கிகார்ட்டுகள் தான் இலங்கையில் மிகவேகமாக வளர்ச்சிகண்டுவரும் கார்ட்டுகளாகும். கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் வகைகளிலும் அவற்றோடுசம்பந்தப்பட்ட விற்பனைகளிலும் சந்தை தலைமைத்துவத்தையும் இந்தகார்ட்டுகளே கொண்டுள்ளன. சில்வர்,கோல்ட்,பிளேடினம் எனவிஸா மற்றும் மாஸ்டர்கார்ட் வகைகளையும், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர்கார்ட், விஸா இன்பினைட் கார்ட்ஸ் எனபல்வகைகார்ட்டுகளை கொமர்ஷல் வங்கிவிநியோகிக்கின்றது.

இந்தகார்ட்டுகள் யாவும் டெப் அன்ட் கோ NFC தொழில்நுட்பத்தைகொண்டவை. உறுதியான NFC POstpw விற்பனைவலையமைப்பையும் இவை கொண்டுள்ளன. கொமர்ஷல் வங்கியிக் மெக்ஸ் லோயல்டிவெகுமதிதிட்டம்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் என இருவகைகார்ட்டுகளுக்கும் வெகுமதிகளைஅள்ளிவழங்கும் ஒரேதிட்டமாகும்.

Most Viewed