Back to Top

Ad

மாவா போதை பொருள் ஒருதொகையுடன் கொட்டகலையில் ஒருவர் கைது

மாவா போதை பொருள் ஒருதொகையுடன் கொட்டகலையில் ஒருவர் கைது

September 12, 2017  02:45 pm

Bookmark and Share
சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த ஒரு தொகை மாவா போதை பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிரடி படையினரும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று மாலை கொட்டகலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மாவா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட 12 மாவா போதை பொருளுடன் மாவை தயாரிப்பதற்காக வைத்திருந்த புகையிலை 500 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

(அத தெரண நிரூபர்)

Most Viewed