Back to Top

விரைவில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றங்கள்

விரைவில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றங்கள்

September 13, 2017  12:58 pm

Bookmark and Share
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஓய்வு பெற்றுள்ள கிரிக்கட் வீரர்கள் சிலருக்கு பொறுப்புக்களை வழங்கி வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கட் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதன்படி முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவுக்கு கிரிக்கட் ஆலோசகர் பதவி வழங்க யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா கடந்த 2010 - 2011 ம் ஆண்டு காலப்பகுதியில் தெரிவுக்குழு தலைவராக இருந்து பின்னர் இராஜினாமா செய்திருந்தார்.

தற்போது இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் தெரிவுக்குழு ஒன்று இல்லை என்பதுடன், புதிய தெரிவுக்குழுவிற்காக ரொஷான் மகாநாம, பெரண்டன் குறுப்பு மற்றும் கிரகம் லெப்ரோய் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரண்டன் குறுப்பு தற்சமயம் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் போட்டி தீர்மானிப்பாளராக பணியாற்றுகின்றார்.

கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் தற்போது வௌிநாட்டில் இருப்பதால் அவர் நாட்டுக்கு வந்தவுடன் இந்த யோசனை குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று கிரிக்கட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

(அத தெரண தமிழ்)

Most Viewed