Back to Top

Ad

யாழில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

யாழில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

September 13, 2017  02:59 pm

Bookmark and Share
வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்று சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015 ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் இன்று (13) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும் தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் வெளியிட்டனர்.

1:6 என்ற விகிதாசாரத்தில் 2015 ஆம் ஆண்டு சம்பள முரண்பாட்டை உடன் தீர்த்து வை, மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கு, இலங்கை மின்சார சபை என்.வி.கியூ அடிமைச் சேவகத்தினை உடன் நிறுத்தி விடு, தொழிற்சங்க அடக்குமுறை மற்றும் பழி வாங்கல்களை உடன் நிறுத்து, இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய நிதி மோசடியை உடன் தீர்த்து வை, இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இடர் கொடுப்பனவொன்று உடன் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவின் மீண்டும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

(அத தெரண நிரூபர்)

Most Viewed