Back to Top

Ad

ஹெரோய்ன் வைத்திருந்த இரண்டு பேர் கைது!

ஹெரோய்ன் வைத்திருந்த இரண்டு பேர் கைது!

September 14, 2017  10:10 am

Bookmark and Share
35 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கிரேன்பாஸ், வதுல்லவல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். br>
கிரேன்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கெண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். br>
கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். br>
சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். br>
இதஞ தவிர 08 கிராமும் 120 மில்லிகிராம் அளவு ஹெரோய்ன் வைத்திருந்த மற்றொருவர் றத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். br>
றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.< br>
(அத தெரண தமிழ்)

Most Viewed