Back to Top

Ad

வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிப்பு

வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிப்பு

September 14, 2017  11:00 am

Bookmark and Share
மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையை வழமைக்குக் கொண்டுவர முடியாதுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நேற்று நண்பகல் 12.00 மணி முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், நாட்டின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின் சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவில்லையாயின், தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதுபோன்ற, வேலை நிறுத்தங்கள் அநீதியானது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய, மின்சார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக, அந்த அமைச்சின் செயலாளர் சுலக்‌ஷன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

(அத தெரண தமிழ்)

Most Viewed