Back to Top

கிளிநொச்சியில் முதல் தடவையாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிரியாவிடை நிகழ்வு

கிளிநொச்சியில் முதல் தடவையாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிரியாவிடை நிகழ்வு

October 10, 2017  11:30 am

Bookmark and Share
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக இருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு செல்கின்ற பொலிஸ் உப பரிசோதகர் டிஎம் சத்துரங்க அவர்களுக்கு தர்மபுரம் கிராமமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை தர்மபுரம் பொதுநோக்குமண்டபத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

மண்டப முன்றலில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இடம்மாற்றம் பெற்றுச் செல்கின்ற பொழில் அதிகாரி சத்துரங்க அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள், பொது அமைப்புக்கள், கிராம அலுவலர்கள் எனப் பலர் நினைவுச் சின்னங்களையும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கினர்.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்து பல சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாது சமூகத்துடன் சேர்ந்து பல சமூகப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்த இவரை வாழ்த்தி விடைகொடுப்பதொடு தற்பொழுது பதவி ஏற்றிருக்கின்ற பொறுப்பதிகாரி இவரைப்போல் செயற்பட வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கேட்டுக் கொண்டனர்.

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிராம மக்கள், பொது அமைப்புக்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அலுவலர்கள் எனப் பலரும் இணைந்து ஒரு ஒரு பிரியாவிடை நிகழ்வினை நடத்தியமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது

(அத தெரண நிருபர்)