Back to Top

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

October 10, 2017  12:51 pm

Bookmark and Share
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த போட்டி தொடரில் அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள். பேட்டிங்கில் டேவிட் வார்னர்,

ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் ஆகியோரையே அவுஸ்திரேலிய அணி அதிகம் நம்பி உள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் போட்டி தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மேக்ஸ்வெல் பார்முக்கு திரும்பினால் ஆஸ்திரேலிய அணி வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.